தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு மூன்றாமிடம்: 'காமெடி கீமெடி எதுவும் பண்ணலயே'

Added : அக் 03, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
மதுரை : மத்திய அரசின் துாய்மை கணக்கெடுப்பு திட்டத்தின் கீழ் (ஸ்வட்ச் சர்வக் ஷன்) துாய்மையான நகரங்களின் பட்டியலில் மதுரைக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துாய்மை நகரங்களின் பட்டியல் தேர்வு செய்யப்படும். மக்கள் தொகை அடிப்படையில் நகரத்தின் நீர்நிலைகள், பொது கழிவறைகள், ரோடு, மார்க்கெட், குடியிருப்பு பகுதி என துாய்மையின்
Clean India, Madurai, Swachh Survekshan, தூய்மை இந்தியா, மதுரை, தூய்மை நகரங்கள்,  Clean Cities,Smart City,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : மத்திய அரசின் துாய்மை கணக்கெடுப்பு திட்டத்தின் கீழ் (ஸ்வட்ச் சர்வக் ஷன்) துாய்மையான நகரங்களின் பட்டியலில் மதுரைக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துாய்மை நகரங்களின் பட்டியல் தேர்வு செய்யப்படும். மக்கள் தொகை அடிப்படையில் நகரத்தின் நீர்நிலைகள், பொது கழிவறைகள், ரோடு, மார்க்கெட், குடியிருப்பு பகுதி என துாய்மையின் தன்மை குறித்து www.sbmurban.org என்ற மத்திய அரசின் இணையதளத்தில் ஓட்டுடெடுப்பு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும்.அந்த வகையில் இந்தாண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் மாநில அளவில் கோவை முதலிடம், சென்னை 2வது, மதுரைக்கு 3ம் இடம்கிடைத்துள்ளது. தேசிய அளவில் கோவை 42, சென்னை 44, மதுரை 45ம் இடம் பெற்றுள்ளன. மதுரை மார்க்கெட் பகுதிகளின் துாய்மைக்கு 90 சதவீதம் மேல், பொது கழிவறை துாய்மைக்கு 25 சதவீதம் கீழ் ஓட்டளித்துள்ளனர்.latest tamil news


மாட்டுத்தாவணி பழ, காய்கறி மார்க்கெட், முக்கிய தெருவில் குப்பை தொட்டிகள், கிருதுமால், பெரியாறு, சாத்தையாறு பாசன கால்வாய், மழைநீர் வாய்க்கால் என பல பகுதிகளில் குப்பை குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் துாய்மை நகரங்கள் பட்டியலில் மதுரைக்குமூன்றாமிடம் என்றால்...காமெடி கீமெடி பண்ணலயே' என வடிவேலு 'டயலாக்' தான் நினைவுக்கு வருகிறது. இதில் மதுரையை விட மோசமான நகரங்களும் பல இருப்பதையும் அறிய முடிகிறது.மாநகராட்சியில் துாய்மை பணியாளர் பற்றாக்குறை, பொது இடங்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மை இல்லாத மக்கள், அசுத்தம் செய்வோரை கண்டு கொள்ளாத அதிகாரிகள், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, காலி பிளாட்களில் தேங்கும் கழிவுநீர் என சுகாதாரக்கேடு தலைவிரித்தாடுகிறது. இதையெல்லாம் சரி செய்து மதுரை முதலிடம் நோக்கி முன்னேறுமா அல்லது மேலும் பின்னால் தள்ளப்படுமா என்பது அடுத்தாண்டு கணக்கெடுப்பில் தெரியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mothibapu - Prayagraj,இந்தியா
03-அக்-202217:53:29 IST Report Abuse
mothibapu அப்படியா
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202217:49:00 IST Report Abuse
venugopal s இங்கு பதிவிடுபவர்கள் இந்த செய்தியை நன்றாக படிக்கவில்லை,
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-அக்-202217:08:37 IST Report Abuse
Natarajan Ramanathan தமிழகத்துக்கு வெளியே சென்றதே இல்லையோ? உண்மையிலேயே இந்தூர் நகரம் மிக அழகான தூய்மையான பெரு நகரமாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X