'எஸ்மா' சட்டம் பாயும்: தமிழிசை எச்சரிக்கை

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது எஸ்மா சட்டம் பாயும் என கவர்னர் தமிழிசை எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது சரியானது அல்ல. மக்கள் நன்மைக்காகத்தான் அரசு தனியார் மய முடிவை எடுத்துள்ளது. மக்கள் பயனடையப் போகின்றனர். பொது மக்களுக்கு இடையூறு செய்வதை ஏற்க முடியாது. நேற்று

புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது எஸ்மா சட்டம் பாயும் என கவர்னர் தமிழிசை எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:

மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது சரியானது அல்ல. மக்கள் நன்மைக்காகத்தான் அரசு தனியார் மய முடிவை எடுத்துள்ளது. மக்கள் பயனடையப் போகின்றனர். பொது மக்களுக்கு இடையூறு செய்வதை ஏற்க முடியாது. நேற்று முன்தினம் மாலை செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மின் தடையால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news




இதற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர். நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்தும் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கோரிக்கை எதுவாக இருந்தாலும் போராட்டம் செய்வது நல்லதல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு செய்தால் எஸ்மா சட்டம் பாயும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
03-அக்-202211:07:07 IST Report Abuse
தமிழன் மக்கள் மற்றும் அரசு வூழியர்கள் குறை கேட்க மறுப்பதேன்??? தங்கள் குறைகளை தெரிவிக்க போராடாமல் என்ன செய்வார்கள்.
Rate this:
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
03-அக்-202216:02:49 IST Report Abuse
Velumani K. Sundaramமக்கள்......
Rate this:
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
03-அக்-202216:04:11 IST Report Abuse
Velumani K. Sundaramமக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள், மக்கள் தேர்ந்தெடுத்த தலைவர் சொல்வதை கேட்டுத்தான் நடக்கவேண்டும்....
Rate this:
Mohankumar - Trichy,இந்தியா
03-அக்-202216:32:46 IST Report Abuse
Mohankumar,..அரசின் முடிவு தவறாக அரசு ஊழியர்களுக்கு விரோதமாக இருந்தால் அதை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடுவது அவர்களின் உரிமை. மக்களுக்காகத்தான் அரசே தவிர அரசுக்காக மக்கள் இல்லை ,...
Rate this:
Mohankumar - Trichy,இந்தியா
03-அக்-202216:35:47 IST Report Abuse
Mohankumarமக்கள் தேர்ந்தெடுத்த தலைவர் சொல்வதை கேட்க இந்த முடிவு மக்களுக்கும்,ஊழியர்களுக்கும் நல்லது அல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X