உ.பி., துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 5 பேர் பலி

Added : அக் 03, 2022 | |
Advertisement
பதோகி: உத்தரபிரதேச மாநிலம் பதோகியில் துர்கா பூஜை பந்தலில் நேற்று (அக்.,2) இரவில் ஆரத்தி நடைபெற்றது. அப்போது பந்தலுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து
Uttar Pradesh, Durga Puja Pandal, Fires, Three Children, Dead,

பதோகி: உத்தரபிரதேச மாநிலம் பதோகியில் துர்கா பூஜை பந்தலில் நேற்று (அக்.,2) இரவில் ஆரத்தி நடைபெற்றது. அப்போது பந்தலுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.



தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் படுகாயமடைந்த 55 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8, 10, 12 வயதுடைய மூன்று சிறுவர்கள், மற்றும் 45, 48 வயதுடைய இரு பெண்கள் என 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X