ஈரோடு மூலப்பாளையம், 3 ரோடு பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மூலப்பாளையத்தில், 3 ரோடு பிரிவு உள்ளது. இப்பிரிவில் இருந்து தான் கரூர், பழநி, ஈரோடு மாநகருக்கு என, தனித்தனியே சாலைகள் பிரிகின்றன. இங்கு சில ஆண்டுக்கு முன் வரை சிக்னல் இருந்தது, ஆனால் அதன் பின் சிக்னல் செயல்படவில்லை. வாகன ஓட்டி
கள் இந்த, 3 ரோடு பிரிவில் முந்தி செல்ல முற்படும்போது, விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: மூன்று ரோடு பிரிவில் சிக்னல் அமைத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிக்னல் அமைக்க வேண்டும். சிக்னல் இல்லாத
தால் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பலமுறை கோரிக்கைவிடுத்தும், இதுவரை சிக்னல் அமைக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'தற்போது, 'பிளிங்கரிங்' சிக்னல் வசதி மட்டும் உள்ளது. சில விநாடிகள் நின்று செல்லுமாறு உள்ள சிக்னல்கள் அமைக்க, 4 லட்சம் ரூபாய் செலவாகும். தனியார் ஸ்பான்சர்கள் முன் வந்தால் மட்டுமே, சிக்னல் அமைக்க முடியும்'
என, கூறினர்.