ஈரோடு:
ப.செ.பார்க் ஒருங்கிணைந்த புதிய வணிக வளாகத்தில், வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்
படையில் கடை ஒதுக்கீடு செய்வதில், சட்ட சிக்கல் இருப்பதாக, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு, ப.செ.பார்க் அருகே, 51 கோடி ரூபாய் மதிப்பில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. பணிகளை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி,
நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் கூறிய
தாவது: வணிக வளாகத்தில், 292 கடைகள் வரவுள்ளன. 153 நான்கு சக்கர வாகனங்கள், 263 டூவீலர்கள் நிறுத்த இட
வசதி உள்ளது. ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் ஏற்கனவே இருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், கடைகள் ஒதுக்க அனைத்து முயற்சி
களும் செய்து வருகிறோம். இதில் சில சட்ட சிக்கல், பிரச்னை உள்ளது. அவை நிவர்த்தி செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காளை மாடு சிலை அருகே கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் முடி
வடையும் தருவாயில் உள்ளது. நசியனுார், காரமடை அருகே அடிப்படை வசதி கேட்டு மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு சென்று ஆய்வு செய்வேன். பூந்துறை பகுதிகளிலும் மக்கள் கறுப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேசி சுமூகமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.