வறுமை, வேலையின்மையை சரி செய்ய வேண்டும்: ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர்

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
புதுடில்லி: நாட்டில் வறுமை, வேலையின்மை என்பது நாட்டின் முக்கிய பிரச்னைகள் என்றும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார்.ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது. இருப்பினும்,
RSS, Jobless, Poverty, Dattatreya Hosabale, ஆர்எஸ்எஸ், வறுமை, வேலையின்மை, பொதுச்செயலாளர், தத்தாத்ரேயா ஹோசபாலே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நாட்டில் வறுமை, வேலையின்மை என்பது நாட்டின் முக்கிய பிரச்னைகள் என்றும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார்.



ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது. இருப்பினும், சில துறைகளில் நாம் சிக்கல்களை எதிர்கொண்டு வருவது உண்மைதான். வறுமை என்பது அரக்கன் போல இருக்கும் பெரிய சவாலாக நம் முன் இருக்கிறது.



இந்த வறுமை என்ற அரக்கனை நாம் வதம் செய்ய வேண்டியது முக்கியம். நாட்டில் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வது வேதனையளிக்கிறது.



அதேபோல நாட்டில் 23 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு ரூ.375க்கும் குறைவான வருமானம் கொண்டவர்களாகவே உள்ளனர். இப்போது நாட்டில் 4 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி நாட்டில் வேலையின்மை விகிதம் 7.6 சதவீதமாக உள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வேலையின்மை நமது நாட்டில் முக்கிய பிரச்னைகளில் ஒன்று. அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



latest tamil news


வேலை தேடும் இளைஞர்களை தொழில்முனைபவர்களாக மாற நாம் ஊக்குவிக்க வேண்டும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அனைத்து வேலைகளும் முக்கியமானது தான். அனைத்து வேலைகளுக்கும் நாம் சமமான மரியாதை அளிக்க வேண்டும்.



தோட்டக்காரர் தனது வேலைக்கு உரிய மரியாதை கிடைக்காவிட்டால், அந்த வேலைக்கு யாருமே செல்ல விரும்ப மாட்டார்கள். எனவே, நாம் அனைத்து வேலைகளையும் மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
03-அக்-202222:39:01 IST Report Abuse
K.n. Dhasarathan எட்டு வருடம் ஆண்டும் எதுவும் சரியில்லை, எனவே அடுத்த தடவையும் எங்களுக்கே வாய்ப்பு கொடுங்கள் எப்படியும் சரி செய்து விடுவோம் என்கிறாரோ ?
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202217:45:08 IST Report Abuse
venugopal s உரைப்பது போல் உண்மையை உரக்கச் சொல்லுங்கள்!
Rate this:
Cancel
neo - Nagercoil,இந்தியா
03-அக்-202217:09:49 IST Report Abuse
neo உலகில் 5வது வளர்ச்சியடைந்த நாடான இந்தியாவில், 20 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வது என்பதற்கு பெயர் வளர்ச்சியா..? உலகின் 2வது பெரும் பணக்காரர் உள்ள இதே நாட்டில், 23 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு ரூ.375க்கும் குறைவான வருமானம் கொண்டவர்களாகவே இருப்பதன் அர்த்தம் என்ன..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X