புதிய பாலம் அமைக்க கோரி காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்

Added : அக் 03, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பழுதடைந்த நடைபாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க கோரி மூமுக.,வினர் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம் நடத்தினர்.மயிலாடுதுறை திருமஞ்சன வீதியில் காவிரி ஆற்றின் குறுக்கே 1, 8, 9 ஆகிய மூன்று வார்டு மக்களின் பிரதான போக்குவரத்திற்காக கடந்த 2001ம் ஆண்டு நடைபாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் குறுகிய காலத்தில் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு
மயிலாடுதுறை, போராட்டம், காவிரி, புதிய பாலம், கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பழுதடைந்த நடைபாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க கோரி மூமுக.,வினர் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம் நடத்தினர்.மயிலாடுதுறை திருமஞ்சன வீதியில் காவிரி ஆற்றின் குறுக்கே 1, 8, 9 ஆகிய மூன்று வார்டு மக்களின் பிரதான போக்குவரத்திற்காக கடந்த 2001ம் ஆண்டு நடைபாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் குறுகிய காலத்தில் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடனே அப்பகுதி மக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.இந்நிலையில் சேதம் அடைந்த பாலத்தை அகற்றி, புதிய பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தங்களது கோரிக்கைக்கு செவிமடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும், விபத்துகள் ஏற்படும் முன்பு அரசு பழைய பாலத்தை அகற்றி, புதிய பாலம் அமைத்து தர வலியுறுத்தியும் மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றில் இறங்கி இடுப்பு அளவு தண்ணீரில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
03-அக்-202220:33:33 IST Report Abuse
Siva இன்றைய மிக சிறந்த காமெடி. பணம் வாங்கி ஓட்டு போட்டனர் பலன் அனுபவித்து தான் ஆகணும். திமுக எல்லாம் ஒரு கட்சியா. பணம் போட்டு பணம் எடுக்கும் ஒரு வியாபாரி. இவர்களால் எப்படி ஒரு தேசத்தை செழிக்க வைத்து மக்கள் வாழ வைக்க முடியும்.... தமிழ் நாட்டில் படிப்பறிவு 40 சதவீதம் தான்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
03-அக்-202216:48:24 IST Report Abuse
a natanasabapathy தங்கள் தொகுதி குறைகளை அரசுக்கு தெரிவிக்க சொல்லி முதல்வர் mla களுக்கு அறிவுறுத்தினார் அது mla களுக்கு தெரியவில்லையா .
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
03-அக்-202215:17:45 IST Report Abuse
madhavan rajan இதுபோல புதுமை திட்டங்களுக்கெல்லாம் அரசு செவிசாய்க்காது. அஹிம்சை வழியில் சில பேருந்துகளின் கண்ணாடி உடைத்தால் அல்லது முக்கியமான சாலையில் சாலைமறியல் செய்தால் அதிகாரிகள் வந்து என்ன என்று விசாரிக்க வாய்ப்பிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X