சிவனுக்கு கோயில் கட்டிய ராஜராஜ சோழன் ஹிந்து இல்லையா?: இயக்குனர் வெற்றிமாறனுக்கு திடீர் சந்தேகம்!

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (193) | |
Advertisement
சென்னை : ‛‛நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக காட்டுவது மாதிரியான விஷயங்கள் நடக்கின்றன'' என இயக்குனர் வெற்றிமாறன் பேசியது சர்ச்சையாகி உள்ளது.பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்களை தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது சூரியை வைத்து ‛விடுதலை' படத்தை எடுத்துள்ளார். அடுத்து சூர்யாவை
Vetrimaaran, Vetrimaran, வெற்றிமாறன்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ‛‛நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக காட்டுவது மாதிரியான விஷயங்கள் நடக்கின்றன'' என இயக்குனர் வெற்றிமாறன் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்களை தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது சூரியை வைத்து ‛விடுதலை' படத்தை எடுத்துள்ளார். அடுத்து சூர்யாவை வைத்து தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்பான கதையில் ‛வாடிவாசல்' படத்தை எடுக்க உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வெற்றிமாறன் : ‛‛அசுரன் படம் தொடர்பாக திருமாவளவனை சந்தித்தேன்.

இது மாதிரியான படங்களை எடுக்கும்போது தனி மனிதர்களால் எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும் என சினிமாவில் சொல்லாதீர்கள். தொடர்ந்து எல்லோரும் இதே தவறை செய்கிறீர்கள். ஒரு அமைப்பாய் கதைக்குள் உங்கள் சினிமாவிற்குள் வாருங்கள் என்றார்.

கலை என்பதே ஒரு அரசியல் தான். திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்ததால் தான் இன்னமும் தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது. சினிமா என்பது வெகுஜன மக்களை சுலபமாக சென்றடைய கூடிய ஒரு கலை. சினிமாவை திராவி இயக்கங்கள் கையில் எடுக்கும்பேது தான் இலக்கியத் துறையை சேர்ந்தவர்கள் 'கலை கலைக்காகதான், கலை மக்களுக்கானது இல்லை' என்றார்கள்.அழகியல் பற்றி நிறைய பேசினார்கள். கலையில் அழகியல் முக்கியமானதுதான். ஆனால், மக்களிடம் இருந்து விலகி எந்த கலையும் முழுமையடையாது. மக்களுக்காகதான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும்.


latest tamil news
தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது... இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்''.

இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றிமாறனின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. ‛‛வான் உயர்ந்து இருக்கும் தஞ்சை பெரிய கோயில் உட்பட ஏராளமான சிவன் கோயில்களை கட்டியவர் ராஜராஜ சோழன். ‛‛அவரை ஹிந்துவா காட்டுறாங்க'' என்று வெற்றிமாறன் பேசுவது அவரது அறியாமையையே காட்டுகிறது'' என்றும், திருமாவளவன் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் இப்படி உளறுகிறார் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (193)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniam - Prague,செக் குடியரசு
09-அக்-202212:30:19 IST Report Abuse
Subramaniam தமிழர்களை வேரறுக்க வந்த ஒரு பேய் தான இவன், இவன் படங்களை பார்த்த எந்த தமிழனும் திருந்த மாட்டார்கள் மாறாக கொலை வெறி பிடித்த காடையர்களாக தான் மாறுவார்கள்.
Rate this:
Cancel
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
08-அக்-202211:15:27 IST Report Abuse
P.Sekaran வெற்றிமாறன் எந்த மதத்தை சார்ந்தவர். இந்துவா, கிறிஷ்டியனா, முஸ்லிமா, சமணரா, அதை சொல்லட்டும்
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
09-அக்-202205:20:13 IST Report Abuse
NicoleThomsonகாசு கொடுத்தா நாட்டையும் காட்டி kuட்டி கொடுக்கும் மதத்தை சேர்ந்தவர் என்று சொல்லலாம்...
Rate this:
Cancel
MP.K - Tamil Nadu,இந்தியா
07-அக்-202214:21:25 IST Report Abuse
MP.K தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் சைவ, வைணவ, சமண புத்த மதங்கள் மட்டுமே இருந்தன என்றும் ஆங்கிலேயன் தான் ஹிந்து என்ற மதத்தின் பெயரை உருவாக்கினான் என்றும் சொல்கிறார்களே ? ஹிந்து என்ற மதத்தின் வயது எழுபத்து ஐந்து தானா ? உண்மை என்ன ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X