கல்வி டிவி மூலம் கட்சி கலரை குழந்தைகளிடம் பரப்பும் திமுக

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை: பள்ளி குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பதற்காக தமிழக அரசு சார்பில், கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டது. இத்தொலைக்காட்சி மூலமாக பள்ளி பாடங்களை ஆசிரியர்கள் செயல்முறையில் கற்பித்து வருகின்றனர். மாணவர்கள் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று அறிந்து வருகின்றனர். இந்த நிலையில், பாடத்தின் வழியாக திமுக அரசு மறைமுகமாக தங்களது கொடி நிறத்திலான காட்சிகளை பாடம் கற்கும்
Kalvi TV, DMK, TN Govt, கல்வி டிவி, சென்னை, தமிழக அரசு, கல்வி தொலைக்காட்சி, திமுக, Education TV, Education Television, DMK,  Chennai,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பள்ளி குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பதற்காக தமிழக அரசு சார்பில், கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டது. இத்தொலைக்காட்சி மூலமாக பள்ளி பாடங்களை ஆசிரியர்கள் செயல்முறையில் கற்பித்து வருகின்றனர். மாணவர்கள் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று அறிந்து வருகின்றனர்.


இந்த நிலையில், பாடத்தின் வழியாக திமுக அரசு மறைமுகமாக தங்களது கொடி நிறத்திலான காட்சிகளை பாடம் கற்கும் குழந்தைகள் மனதில் பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இது தொடர்பான வீடியோவில், மாணவர்களை இரு குழுக்களாக பிரிப்பது போன்ற எடுத்துக்காட்டுடன் ஒரு ஆசிரியை பாடம் எடுக்கிறார். அதில் முதலில் திமுக கட்சியின் நிறங்களான கருப்பு, சிவப்பு என காட்டப்படுகிறது. சில வினாடிகளுக்கு பிறகு அவை நீலம், சிவப்பாக மாற்றப்படுகிறது. மொத்த பாடத்தையும் நீலம், சிவப்பாகவே காட்டியிருக்கலாம், ஆனால் வேண்டுமென்றே குழந்தைகள் மனதில் பதியும் நோக்கில் திமுக கட்சி நிறங்களை புகுத்தியுள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.



latest tamil news


ஹிந்தி உள்ளிட்ட எந்த ஒரு செயலையும் மாணவர்கள், மக்களிடையே புகுத்தக்கூடாது என தொடர்ந்து பேசி வரும் திமுக, பாடம் வாயிலாக கொடியை புகுத்துகிறது. தங்கள் கட்சி கொடியை எதிர்கால சந்ததியினரிடம் புகுத்துவதற்காக பின்வாசல் வழியாக அரசு டிவி மூலம் திமுக இந்த வேலையை செய்வதாக அதிமுக.,வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
03-அக்-202221:44:26 IST Report Abuse
M  Ramachandran கட்சியை நடத்த சிறந்த பண்பு இல்லை. இது போனற கீழ் தர எண்ணஙகளய் தலைமையக்கு கொடுப்பதால் கட்சியின் நிலைமையை இன்னும் கீழ் இறஙகும். அதைய கூட ஸ்டாளின் அறிந்து கொள்ள முடியாத பரிதாப நிலையில்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
03-அக்-202221:37:53 IST Report Abuse
M  Ramachandran கடையதெடுத்த அயோக்கிய தானம். பிஞ்சிகளின் மனதில் நஞ்சாய் புகுத்தும் கொடிய அரக்கர்கள்.
Rate this:
Cancel
03-அக்-202220:54:51 IST Report Abuse
சிந்தனை திருட்டு முரட்டு கயவர்களோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X