இலகுரக போர் ஹெலிகாப்டர்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: இலகுரக போர் ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார்.ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுனவம்(ஹெச்ஏஎல்), இலகுரக ஹெலிகாப்டர்களை உள்நாட்டிலேயே தயாரித்தது.சிறப்பம்சங்கள்:இது எதிரி நாட்டு ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இது நாட்டின் எல்லைப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் பணியில்

புதுடில்லி: இலகுரக போர் ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார்.
latest tamil newsஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுனவம்(ஹெச்ஏஎல்), இலகுரக ஹெலிகாப்டர்களை உள்நாட்டிலேயே தயாரித்தது.சிறப்பம்சங்கள்:


இது எதிரி நாட்டு ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இது நாட்டின் எல்லைப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இலகுரக ஹெலிகாப்டர்களில் இரவிலும் ஆயுதங்களைப் பொருத்தி தாக்குதல் நடத்த முடியும்.latest tamil newsஅனைத்து காலநிலைகளிலும் கூட அந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்த முடியும். தேடுதல்-மீட்பு நடவடிக்கைகளிலும் அதைப் பயன்படுத்த முடியும். மெதுவாகப் பயணிக்கும் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றைக் கூட அந்த ஹெலிகாப்டரால் தாக்க முடியும். இது விமானப்படை, ராணுவம் ஆகியவற்றின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும்அர்ப்பணிப்பு:latest tamil newsஇலகுரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையில் அதிகாரபூா்வமாக இணைக்கும் நிகழ்ச்சி ஜோத்பூரில் இன்று(அக்.,03) நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று இலகுரக ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப் படைத் தலைமைத் தளபதி, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.5.8 டன் எடை கொண்ட ஹெலிகாப்டா், இரட்டை என்ஜின்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே பல்வேறு ஆயுதங்கள் வெற்றிகரமாகப் பொருத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படைக்கு 10 இலகுரக ஹெலிகாப்டர்கள், ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்கள் என மொத்தம் 15 ஹெலிகாப்டர்களை ரூ.3,887 கோடியில் வாங்க மத்திய அமைச்சரவை கடந்த மாா்ச்சில் ஒப்புதல் அளித்திருந்தது. அவற்றில் முதல் தொகுதியானது இன்று விமானப்படையில் இணைக்கப்பட்டது.latest tamil newsநிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசுகையில், 'இந்திய விமானப்படை தனது தைரியம் மற்றும் வீரத்தால் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியுள்ளது.latest tamil newsஇது எதிரிகளை ஏமாற்றி, பலவிதமான வெடிமருந்துகளை எடுத்துச் சென்று, விரைவாக தளத்திற்கு அனுப்பும் திறன் கொண்டது. பல்வேறு நிலப்பரப்புகளில் நமது ஆயுதப் படைகளின் தேவைகளை மிகச்சரியாக பூர்த்தி செய்கிறது, மேலும் இது நமது ராணுவம் மற்றும் விமானப்படை ஆகிய இரண்டிற்கும் ஒரு சிறந்த தளமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
03-அக்-202222:26:39 IST Report Abuse
Desi ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
03-அக்-202222:26:26 IST Report Abuse
Desi பாரத் மாதா கி ஜெய். ஜெய் ஹிந்தி.
Rate this:
Cancel
03-அக்-202220:52:57 IST Report Abuse
சிந்தனை அருமையான திட்டம். நன்றி. ஜய் பாரத். ஜய் பாரதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X