கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி: மேலும் 3 பேர் மாயம்

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தஞ்சாவூர்: துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினர். இதில் 3 பேர் உடல் சடலமாக மீட்க்கப்பட்டது. மேலும் 3 பேர் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு துாத்துக்குடியில் இருந்து ஒரு பஸ்ஸில் 40 பேர் சுற்றுலா பயணிகளாக நேற்று இரவு கிளம்பி இன்று (03ம் தேதி) காலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தஞ்சாவூர்: துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினர். இதில் 3 பேர் உடல் சடலமாக மீட்க்கப்பட்டது. மேலும் 3 பேர் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.




latest tamil news



தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு துாத்துக்குடியில் இருந்து ஒரு பஸ்ஸில் 40 பேர் சுற்றுலா பயணிகளாக நேற்று இரவு கிளம்பி இன்று (03ம் தேதி) காலை பூண்டி வந்தனர். அவர்களில், சிலர் கொள்ளிடம் ஆற்றில், குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.



latest tamil news



இதில், துாத்துக்குடி, சிலுவைபட்டி கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்கள் சார்லஸ்,38,. பிருத்திவிராஜ்,35, தாவித்ராஜ்,30, தெம்மைராஜ் மகன் ஈசாக்,19, சுந்தரராஜ் மகன் பிரவின்ராஜ், செல்வராஜ் மகன் கெர்மஸ் ஆகிய 6 பேரும் ஆற்றில் மூழ்கினர்.


உறவினர்கள் கூச்சலிட்ட நிலையில், அப்பகுதியினர் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சார்லஸ், பிருத்திவிராஜ் ஆகியோரை மீட்டனர். அதன் பிறகும் தொடர்ந்து தேடும் பணி நடந்தது.



latest tamil news



இதில் 4 மணி நேரத்திற்கு பிறகு தாவித்ராஜ் உடல் மீட்டக்கப்பட்டது. மேலும் 3 பேரின் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடுகின்றனர். இறந்த மூவரும் சகோதர்கள்..

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
03-அக்-202222:41:40 IST Report Abuse
Mohan ஆற்றில் மணல் இருக்கும் என்ற நம்பிக்கை. தர்மம் தலை காக்கும். அதே போல பாத்திரத்திற்கு...
Rate this:
Cancel
Venkataraman - New Delhi,இந்தியா
03-அக்-202222:36:18 IST Report Abuse
Venkataraman நீச்சல் கற்றுக்கொள்பவர்களுக்கு நீரில் மூழ்காமல் இருப்பதற்காக இடுப்பில் கட்டிக் கொள்ளும் லைப் பெல்ட் தரப்படுகிறது. அதேபோல எல்லா நீர்நிலைகளிலும் குளிக்கப்போகும்போது லைப் பெல்ட் அணிந்துதான் குளிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட வேண்டும். லைப் பெல்ட் அணியாமல் குளம் ஏரி ஆறு போன்ற நீர் நிலைகளில் குளிப்பதை தடை செய்ய வேண்டும்
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
03-அக்-202220:44:19 IST Report Abuse
M.COM.N.K.K. நீர்நிலைகளில் குளிக்கும்போது கண்டிப்பாக கவனமாக நாம் இருத்தல் மிக மிக முக்கியம்.நீர்நிலைகளில் குளிக்கும் போது நாம் கவனக்குறைவாக இருப்பதே இதற்கு காரணம் வருடாவருடம் இதுபோன்ற செய்திகள் வருவது வருத்தமளிப்பதாக உள்ளது ஜாலியாக இருக்கும்போது கொஞ்சம் நாம் கவனமாகவும் இருக்கவேண்டும் அதுதான் நமக்கு நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X