'நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் செப்டம்பரில் 6.43 % ஆக சரிவு'

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் செப்டம்பரில் 6.43 சதவீதமாக சரிந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஆகஸ்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவீதமாக அதிகரித்த நிலையில், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்ததால், செப்டம்பரில் வேலைவாய்ப்பின்மை ஒரே மாதத்தில் 1.87 சதவீதம் அளவுக்கு
இந்தியா, India, வேலைவாய்ப்பின்மை விகிதம், Unemployment Rate, சரிவு, drops, ராஜஸ்தான், சட்டீஸ்கர், செப்டம்பர், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்


நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் செப்டம்பரில் 6.43 சதவீதமாக சரிந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆகஸ்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவீதமாக அதிகரித்த நிலையில், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்ததால், செப்டம்பரில் வேலைவாய்ப்பின்மை ஒரே மாதத்தில் 1.87 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த மாதம், இந்தியாவில் வேலையில் இருப்போர் எண்ணிக்கை 20 லட்சம் அளவுக்கு குறைந்து, 39.46 கோடியாக இருந்தது.


செப்டம்பரில்,வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பால், வேலைவாய்ப்பின்மை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் சரிவை சந்தித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சி.எம்.ஐ.இ) இயக்குநர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.



latest tamil news


சி.எம்.ஐ.இ அமைப்பின் தரவுகளின்படி, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறிப்பிடும்படியாக குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஒரே மாதத்தில் 1.84 சதவீதம் குறைந்துள்ளது. ஆகஸ்டில் 7.68 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 5.84 சதவீதமாக குறைந்தது.


அதேநேரத்தில், இந்தாண்டு பிப்ரவரி முதல் வேலைவாய்ப்பின்மை விகிதம் (ஜூலை தவிர) தொடர்ச்சியாக 7 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

ஆகஸ்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம், ஓராண்டு இல்லாத அளவுக்கு உச்சபட்ட அளவாக 8.3 சதவீதமாக பதிவாகியது.

கிராமங்களை போலவே, நகர்ப்புறங்களில், இதே மாதிரியான போக்கு காணப்படுகிறது. ஆகஸ்டில் 9.57 சதவீதமாக அதிகரித்த வேலைவாய்ப்பின்மை விகிதம், செப்டம்பரில் 7.70 சதவீதமாக சரிந்துள்ளது. கூடுதலாக, 80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக பொருளாதார நல்ல நிலையில் இருப்பதை காட்டுகிறது.


ராஜஸ்தான் மோசம், சட்டீஸ்கர் சூப்பர் :


மாநிலங்கள் வாரியாக பார்க்கையில், செப்டம்பரில், வேலைவாய்ப்பின்மை விகிதம் ராஜஸ்தானில் அதிகபட்சமாக 23.8 சதவீதமாக பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில், 23.2 சதவீதமாகவும், திரிபுராவில் 17 சதவீதமாகவும் உள்ளது. ஹரியானாவில் 22.9 சதவீதமும், ஜார்க்கண்டில் 12.2 சதவீதமும், பீஹாரில் 11.4 சதவீதமாக உள்ளது.

நாட்டிலேயே சட்டீஸ்கரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 0.1 சதவீதமாக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து அசாமில் 0.4 சதவீதமும், உத்தர்காண்டில் 0.5 சதவீதமும் பதிவாகி உள்ளன. ம.பி.,யில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 0.9 சதவீதமாக உள்ளது. ஒடிசாவில் 2.9 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் பதிவாகி உள்ளது.


இந்தியாவில் ஆகஸ்டில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்ததற்கு, மழைப்பொழிவு அதிகரித்து, விதைப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதே காரணமென கூறப்படுகிறது. இதன் தாக்கம், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மையிலும் எதிரொலித்தது. ஆகஸ்டில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7 சதவீதமாகவும், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
03-அக்-202221:37:28 IST Report Abuse
Narayanan Muthu இந்த அரசிடம் முறையான சரியான புள்ளிவிவரங்கள் கிடையாது. பல துறைகளில் அரசே இதை ஒப்புக்கொண்டுள்ளது. அப்படி இருக்கையில் இந்த தகவல் முற்றிலும் தவறான கணக்கில் வெளியிடப்பட்டிருக்கலாம். அரசின் தேவைக்கேற்ப புள்ளிவிவரங்கள் ஜோடிக்கப்பட்டு கணக்கையே மாற்றும் வேலை இந்த அரசில் அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வு. இதை கருத்தாக பதிவு செய்தால் கருத்துக்கு பதில் சொல்ல முடியாமல் ராகுல் சோனியா என உளறி கொட்டுவார்கள் சில சங்கிகள்.
Rate this:
Cancel
sakthi vel -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202218:27:59 IST Report Abuse
sakthi vel நம்பும் படி இந்த தகவல் இல்லை
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
03-அக்-202218:21:16 IST Report Abuse
S.Baliah Seer இந்த புள்ளி விபரங்களை அதாவது எத்தனை பேர் வேலையில்லாமல் அல்லது வேலைக்கு செல்லாமல் இருந்தார்கள் என்பதை எவ்வாறு திரட்டினார்கள்?முதியோர். வீட்டில் இருக்கும் பெண்கள் இவர்களின் எண்ணிக்கையை எப்படி அறிந்தார்கள்? மொத்தத்தில் இது ஒரு டுபாக்கூர் ஸ்டேட்டிஸ்டிக்ஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X