வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காந்தி ஜெயந்தி விழாவில் புறக்கணித்தது ஏன் என கேட்டு டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.
டில்லி துணை நிலை கவர்னர் விகே சக்சேனா மற்றும் முதல்வர் கெஜ்ரிவால் அரசு இடையே மோதல் போக்கு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கவர்னரின் ஒப்புதல் கேட்டு 45க்கும் மேற்பட்ட கோப்புகளை முதல்வர் அலுவலக அதிகாரிகள் அனுப்பி வைத்திருந்தனர். அக்கோப்புகளில்முதல்வர் கையெழுத்து இல்லை. இது குறித்து விளக்கம் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பினார்.
![]()
|
இந்நிலையில் நேற்று (அக்.02) தேசதந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள், மற்றும் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள், இருவரின் நினைவிடங்களான ராஜ்காட், விஜய் காட் ஆகிய இடங்களில், பிரதமர் , ஜனாதிபதி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்துவது மரபு. டில்லி முதல்வர் என்ற முறையில் இவ்விரு விழாக்களில் பங்கேற்காமல், மரபை மீறி இரு விழாக்களையும் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். அந்நேரம் குஜராத் தேர்தலில் பிரசாரத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கெஜ்ரிவாலுக்கு வி.கே.சக்சேனா, கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியுகியுள்ளது.