புதுடில்லி :உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு நவ., 3ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, பீஹாரின் கோபால்கஞ்ச், மொகாமா, ஹரியானாவின் ஆதாம்புர், தெலுங்கானாவின் முனுகோடு, உத்தர பிரதேசத்தின் கோலா கோரக்நாத், ஒடிசாவின் தாம்நகர் ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.
![]()
|
எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்கள் இறந்தது, தகுதி நீக்கம் போன்ற காரணங்களால் இந்த தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில், வரும் நவ., 3ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், இதில் பதிவாகும் ஓட்டுகள் நவ., 6ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் இன்று (அக்.03) அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து இந்த தொகுதிகளில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement