200 ரயில்வே ஸ்டேஷன்களை நவீனமயமாக்க திட்டம்

Added : அக் 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
அவுரங்காபாத் :நாடு முழுதும், 200 ரயில்வே ஸ்டேஷன்கள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் நவீனமயமாக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:இந்திய
Railway, Railway Station, Ashwini Vaishnav, ரயில்வே, ரயில்வே ஸ்டேஷன், அஸ்வினி வைஷ்ணவ்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அவுரங்காபாத் :நாடு முழுதும், 200 ரயில்வே ஸ்டேஷன்கள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் நவீனமயமாக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:இந்திய ரயில்வே துறையை நவீன தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப மாற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


latest tamil news



நாடு முழுதும், 200க்கும் மேற்பட்ட முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களை உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவற்றில், 47 ரயில்வே ஸ்டேஷன்களுக்கான 'டெண்டர்' பணிகள் நிறைவடைந்துள்ளன.



இந்த ரயில்வே ஸ்டேஷன்களை நவீனப்படுத்துவதற்கான 'மாஸ்டர் பிளான்' தயாராக உள்ளது.

பயணியர் காத்திருப்பு அறை, உணவகங்கள், குழந்தைகளை கவரும் வகையிலான பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம்பெறும்வகையில் இந்த ரயில்வே ஸ்டேஷன்கள் மாற்றப்படும். மேலும், இந்த ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ளூர் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
04-அக்-202216:02:18 IST Report Abuse
venugopal s சரி சரி, அதில் தமிழகத்துக்கு உரிய பங்கு எதுவும் உண்டா? இல்லை வழக்கம் போல் தமிழகத்துக்கு பட்டை நாமம் தானா ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-அக்-202221:45:24 IST Report Abuse
Ramesh Sargam இவ்வளவு வருடங்கள் நாம் அரசை தூற்றினோம், ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவில்லை என்று. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு நிறைய முன்னேற்றங்கள். அதில் இதுபோன்று ரயில் நிலைய தூய்மை. இனி, மக்களாகிய நாமும் அரசுடன் கைகோர்த்து இதுபோன்ற தூய்மைப்பணியில் ஒத்துழைக்கவேண்டும். அட்லீஸ்ட் ரயில் நிலையங்களை மக்கள் அசுத்தப்படாமல் இருப்பது சிறந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X