ஆஃபர் லெட்டரை திரும்ப பெறும் ஐ.டி., நிறுவனங்கள்

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி : முன்னணி ஐ.டி.,நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா, புதிய விண்ணப்பதாரர்களுக்கு அளித்த ஆஃபர் லெட்டரை திரும்ப பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.உலகளாவிய பொருளாதார தாக்கத்தால், மந்தநிலை குறித்த அச்சம், பணவீக்கம் உயர்வு காரணமாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்திக்க கூடுமென கூறப்படுகிறது. மந்தநிலை
Freshers, Information Technology,offer letter, Revoked, புதியவர்கள், தகவல் தொழில்நுட்பம், பணி வழங்கல் கடிதம், வாபஸ், பொருளாதார மந்தநிலை, ஐ.டி., பணியாளர்கள்


புதுடில்லி : முன்னணி ஐ.டி.,நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா, புதிய விண்ணப்பதாரர்களுக்கு அளித்த ஆஃபர் லெட்டரை திரும்ப பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.உலகளாவிய பொருளாதார தாக்கத்தால், மந்தநிலை குறித்த அச்சம், பணவீக்கம் உயர்வு காரணமாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்திக்க கூடுமென கூறப்படுகிறது. மந்தநிலை ஏற்பட்டால், இந்திய ஐ.டி.,நிறுவனங்களின் வளர்ச்சி படிப்படியாக குறையுமென நிபுணர்கள் ஏற்கனவே கணித்துள்ளனர்.


இதனை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக, பணியாளர்களுக்கான சலுகைகளை குறைத்து வருகின்றன. டி.சி.எஸ் நிறுவனம், பணியாளர்களுக்கு அளிக்கும் ஊதிய உயர்வை 70 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளது. விப்ரோ, இந்தாண்டு ஊதிய உயர்வு அளிக்கப்படாது என அறிவித்துள்ளது.latest tamil news


இந்நிலையில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா, புதியவர்கள் 3 - 4 மாதங்களில் பணியில் சேர தாமதப்படுத்திய நிலையில், தற்போது பணி வழங்கல் கடிதத்தை திரும்ப பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் அந்த செய்தியில், கல்வி நிறுவனங்களில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு, எழுத்து தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியில் சேருவதற்கான கடிதம் அளிக்கப்படும். இவ்வாறு கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வான ஆயிரக்கணக்கான புதிய விண்ணப்பதாரர்களுக்கு கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. முதலில் புதிய விண்ணப்பதாரர்களின் நிறுவனத்தில் சேருவது ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக பணியில் சேருவதற்கான ஆஃபர் கடிதம் ரத்து செய்யப்பட்டது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐ.டி.,நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இமெயிலில் 'எங்கள் கல்வித் தகுதிக்கான நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு அளித்த பணி கடிதம் செல்லாது' என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்து ஐ.டி.,நிறுவனங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
04-அக்-202219:57:13 IST Report Abuse
N Annamalai ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் ?.அவர்கள் அனைவரின் நம்பிக்கையையும் வீணடித்தது போல் இருக்கிறது
Rate this:
Srprd - ,
05-அக்-202220:06:54 IST Report Abuse
Srprd இவர்கள் ரொம்ப selfish. புதிய ப்ராஜெக்ட்கள் கிடைக்கின்றன என்றால் மட்டுமே அதிக அளவில் ஆட்கள் தேவை என்பார்கள். ப்ராஜெக்ட்கள் குறைய ஆரம்பித்தால், ப்ராஜெக்ட் வரவே இல்லை என்றால் lay off தான். அதற்கான முதல் அறிகுறி கொடுத்த offer ஐ வாபஸ் பெற்றுக் கொள்வது....
Rate this:
Cancel
04-அக்-202212:06:24 IST Report Abuse
அப்புசாமி வருஷத்துக்கு லட்சக்கணக்கில் பட்டதாரிகளை ஐ.ஐ.டி, என்.ஐ.டி கல்லூரிகள் உற்பத்தி செய்து தள்ளுகின்றன. இவிங்க இல்லேன்னா, அடுத்த பேட்ச். இவிங்க ஸ்டார்ட் அப் டீக்கடை போடலாம்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
04-அக்-202207:30:53 IST Report Abuse
Duruvesan விடியல் சார், நீட் இல்லாத மருத்துவம் மட்டுமே படிப்பு என்று கூறி உள்ளார்கள். Engg படிச்சது யார் தப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X