தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: 'ஓசி' டிக்கெட் என்று ஏழ்மையை ஏளனம் செய்த, திறனற்ற தி.மு.க., அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை, தமிழக பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது. இந்த சர்வாதிகார போக்குக்கு, மக்கள் விரைவில் முடிவு கட்டுவர்.
டவுட் தனபாலு: தன்மானத்தோடு, காசு கொடுத்து டிக்கெட் வாங்குறேன்னு சொன்ன மூதாட்டி மேல வழக்கு போடுற போலீசார் தான், 'ஓசி டிக்கெட்' என, பெண்களை ஏளனம் செய்த அமைச்சருக்கு பாதுகாப்பு கொடுக்குறாங்க பாருங்க... இது தான், திராவிட மாடல் அரசு என்பதில் 'டவுட்'டே இல்லை
lவிருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு மட்டுமல்ல, மக்களை பாதிக்கும் முடிவுகளை யார் எடுத்தாலும், காங்., எதிர்ப்பு குரல் கொடுக்கும். தமிழகத்தில் சொத்து வரி உயர்வு அறிவிப்பு வந்த போது, மாநில காங்., தலைவர் அழகிரி தான் முதன் முதலில் எதிர்த்தார்.
டவுட் தனபாலு: சும்மா ஒப்புக்கு, 'வரி உயர்வை எதிர்க்கிறோம்'னு அறிக்கை விட்டதை எல்லாம் கணக்குல சேர்க்க முடியாது... ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் தெம்பு, தங்கள் கட்சிக்கு இருக்கிறதா என்பது தான் எங்க, 'டவுட்!'
முதல்வர் ஸ்டாலின்: 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்பது, இந்தியாவை ஒன்றுபடுத்தும் மந்திர சொற்கள். இந்த இரண்டுக்கும் குந்தகம் ஏற்படுத்துபவர்களை, இந்திய ஒருமைப்பாட்டின் எதிரிகள் என்று தான் சொல்ல வேண்டும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை தான் கேட்கிறோமே தவிர, பிரிவினை கேட்கவில்லை.
டவுட் தனபாலு: 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு' என கோஷம் போட்ட கட்சியினர் யார்... தேச விரோத செயலில் ஈடுபடுவோரை, ஓட்டுக்காக பாதுகாப்பது யார் என்ற, 'டவுட்'களுக்கு யாரிடம் போய் விளக்கம் கேட்பது?
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:'ஓசி' டிக்கெட் என்று ஏழ்மையை ஏளனம் செய்த, திறனற்ற தி.மு.க., அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை, தமிழக பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது. இந்த சர்வாதிகார போக்குக்கு, மக்கள் விரைவில் முடிவு கட்டுவர்.
* டவுட் தனபாலு: தன்மானத்தோடு, காசு கொடுத்து டிக்கெட் வாங்குறேன்னு சொன்ன மூதாட்டி மேல வழக்கு போடுற போலீசார் தான், 'ஓசி டிக்கெட்' என, பெண்களை ஏளனம் செய்த அமைச்சருக்கு பாதுகாப்பு கொடுக்குறாங்க பாருங்க... இது தான், திராவிட மாடல் அரசு என்பதில் 'டவுட்'டே இல்லை!