சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஊராட்சி நிர்வாகத்தில் கோலோச்சும் வாரிசுகள்!

Added : அக் 03, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், ஆயுத பூஜை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். நாயர் தந்த பில்டர் காபியை உறிஞ்சியபடியே, ''செய்தி துறையை கண்டுக்கவே மாட்டேங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார்,அன்வர்பாய்.''மாவட்டத்துல எந்த அரசு நிகழ்ச்சி நடத்தினாலும், செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு தகவல் தெரிவிக்கணும்... அவா தான், விதிமுறைப்படி அழைப்பிதழ்
டீக்கடை பெஞ்ச்

பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், ஆயுத பூஜை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். நாயர் தந்த பில்டர் காபியை உறிஞ்சியபடியே, ''செய்தி துறையை கண்டுக்கவே மாட்டேங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார்,அன்வர்பாய்.''மாவட்டத்துல எந்த அரசு நிகழ்ச்சி நடத்தினாலும், செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு தகவல் தெரிவிக்கணும்... அவா தான், விதிமுறைப்படி அழைப்பிதழ் தயாரிக்கறது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கறது, பத்திரிகைகளுக்கு செய்திகள் தரது மாதிரியான பணிகளை செய்வா ஓய்..


.''ஆனா, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தரப்புல, அவாளே இஷ்டத்துக்கு நிகழ்ச்சிகளை நடத்திக்கறா... பத்திரிகையாளர்களுக்கும் தெரிவிக்கறது இல்லை ஓய்...


''போன அ.தி.மு.க., ஆட்சியில, காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க., வசம் இருந்ததால, எம்.எல்.ஏ.,வை அழைக்க கூடாதுங்கறதுக்காக, காதும் காதும் வச்சா மாதிரி பல நிகழ்ச்சிகளை அதிகாரிகள் நடத்தினா... இப்பவும், அதே முறையை கடைப்பிடிக்கறா... தங்களை மாவட்ட நிர்வாகம் புறக்கணிக்கறதை, செய்தி துறை அதிகாரிகளும் பெருசா எடுத்துக்கலை ஓய்...'' என்றார், குப்பண்ணா.உடனே,


''மாவட்ட வாரியா கருத்தரங்கம் நடத்த போறாங்க...'' என, 'டிராக்' மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்.


..''நரேந்திர மோடி, 2001ல குஜராத் முதல்வர் பதவிக்கு வந்தார்... 2014 வரை அந்த பதவியில இருந்தவர், அப்புறம் பிரதமர் ஆனாருங்க... அவரது, 21 வருஷ முதல்வர் மற்றும் பிரதமர் பதவிக் காலத்துல, எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாம ஆட்சி நடக்குதுங்க..


.''ஊழல் இல்லாத அவரது ஆட்சி நிர்வாகத்தை மக்களுக்கு தெரிவிக்கிற முயற்சியா, தமிழக பா.ஜ., சார்புல, 'மோடி 2.0' என்ற பெயர்ல கருத்தரங்கு நடத்த ஏற்பாடு பண்றாங்க... மாவட்ட வாரியா இந்த கருத்தரங்கத்தை நடத்த போறாங்க... 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரசாரமா இதை பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.


''வாரிசுகள் ஆதிக்கம் தான் கொடி கட்டி பறக்கு வே...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார் அண்ணாச்சி.''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.


''திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்துல, 43 ஊராட்சிகள் இருக்கு... இதுல, 29 ஊராட்சிகள்ல பெண்கள் தான் தலைவர்களா இருக்காவ வே...


''பல ஊர்கள்ல, அவர்களது கணவர்கள்தான் நிர்வாகத்தை கவனிக்காவ... இதுல, ரெண்டு ஊராட்சிகள்ல,தலைவர்களின் வாரிசுகள் தான்,'ஆக்டிங்' தலைவர்களாசெயல்படுதாவ வே...


''ஊராட்சி சம்பந்தமான நிகழ்ச்சிகள்ல, அம்மாவுக்கு பதிலா மகன்கள் தான் கலந்துக்கிடுதாவ... இந்த பகுதிகள்ல இருக்கிற தொழிற்சாலைகள்ல வசூல் வேட்டையும்நடத்துதாவ வே...


''இதுல, ஒரு தலைவரின் மகன் மேல, போலீஸ்ல நிறைய வழக்குகள் நிலுவையில இருக்கு... ஆனாலும், ஊராட்சிகள்ல அவங்க வச்சது தான் சட்டமா இருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர்பாய்,


''தேவா, நரேஷ்கிட்ட உங்க விஷயத்தை பேசிட்டேன்... அவருக்கு போன் போடுங்க பா...'' எனக் கூறி வைத்தார்.கடையில் பூஜை போடுவதற்கான ஏற்பாடுகளில் நாயர் இறங்க, பெரியவர்கள் புறப்பட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (4)

ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-அக்-202214:22:35 IST Report Abuse
ramesh இன்னைக்கு தி மு க குறை சொல்ல ஒண்ணுமில்லயா
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
04-அக்-202216:59:18 IST Report Abuse
கல்யாணராமன் சு.மூணுல, ரெண்டு உங்க திருடர்கள் முன்னேற்ற கழகத்தைப் பத்திதானே ? அதையே கவனிக்கலியா ?? என்னமோ போங்க...
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
04-அக்-202207:33:49 IST Report Abuse
Ravichandran Narayanaswamy ……
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-அக்-202206:51:37 IST Report Abuse
D.Ambujavalli ஒன்றை கவனிக்க வேண்டும் பெண்களுக்கு அதிகாரம் கொடுத்தால் ஆண்கள் தான் ஆள்வதற்கு வருவார்கள் ஆண்கள் அமைச்சர், பெரிய இடங்களில் பெண்களே ‘வாங்கும் விதத்தில் வாங்கி’ அடுப்படி ஆட்சி நடத்துகிறார்கள் திராவிட மாடலில் இது சகஜம்தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X