நம்பிக்கை ஓட்டெடுப்பு : பஞ்சாப் அரசு வெற்றி

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி :பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க, அக்கட்சியைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 25 கோடி ரூபாயை தர, பா.ஜ., பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார்.இதற்கு அனுமதி
நம்பிக்கை ,ஓட்டெடுப்பு,  பஞ்சாப் ,அரசு வெற்றி

புதுடில்லி :பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க, அக்கட்சியைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 25 கோடி ரூபாயை தர, பா.ஜ., பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார்.



இதற்கு அனுமதி அளிப்பதில் ஆளுங்கட்சிக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இறுதியில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த செப்., 27ல் கவர்னர் அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து, பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.சபாநாயகர் குல்தர் சிங் சந்த்வான் குரல் ஓட்டெடுப்பு நடத்த அழைப்பு விடுத்தார்.


latest tamil news



ஆம் ஆத்மி உறுப்பினர்கள் 91 பேர் உட்பட 93 உறுப்பினர்கள் ஆதரவாக ஓட்டளித்தனர். இதையடுத்து, ஆம் ஆத்மி பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப் பட்டது.பஞ்சாபில், பா.ஜ.,வின் 'ஆப்பரேஷன் லோட்டஸ்' தோற்கடிக்கப்பட்ட தாக முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
04-அக்-202203:10:25 IST Report Abuse
Aarkay பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, யாரும் கேட்காமலேயே இது போன்ற நாடகங்களை அரங்கேற்றுவது இந்த கட்சிக்கு வழக்கம்தான். தலையிலிருந்து வால் வரை மொத்தமும் கோமாளிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X