கணவரின் வருமான விபரம்: மனைவிக்கு அளிக்க உத்தரவு

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி-கணவரின் வருமான விபரங்கள் பற்றிய தகவல்களை, அவரது மனைவிக்கு வழங்கும்படி வருமான வரித் துறைக்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சஞ்சு குப்தா என்ற பெண், பிரிந்து வாழும் தன் கணவரின் வருமானம் பற்றிய விபரங்களை வழங்கும்படி, வருமான வரித் துறையின் சம்பந்தப்பட்ட தகவல் தொடர்புத் துறை அதிகாரிக்கு விண்ணப்பித்திருந்தார்.ஆனால், கணவரின் ஒப்புதல் இல்லாமல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



புதுடில்லி-கணவரின் வருமான விபரங்கள் பற்றிய தகவல்களை, அவரது மனைவிக்கு வழங்கும்படி வருமான வரித் துறைக்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.




latest tamil news


சஞ்சு குப்தா என்ற பெண், பிரிந்து வாழும் தன் கணவரின் வருமானம் பற்றிய விபரங்களை வழங்கும்படி, வருமான வரித் துறையின் சம்பந்தப்பட்ட தகவல் தொடர்புத் துறை அதிகாரிக்கு விண்ணப்பித்திருந்தார்.ஆனால், கணவரின் ஒப்புதல் இல்லாமல், அவரது வருமானம் பற்றிய தகவல்களை மனைவிக்கு தர முடியாது என, அந்த அதிகாரி மறுத்து விட்டார்.



இதையடுத்து அந்த பெண், தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். வருமான வரித்துறை அதிகாரியின் உத்தரவை தீர்ப்பாயமும் உறுதி செய்தது. இதன்பின், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய தகவல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.


latest tamil news



ஏற்கனவே இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்த விபரங்களை ஆய்வு செய்த தகவல் ஆணையம், அந்த பெண்ணுக்கு, அவரது கணவரின் ஆண்டு வருமானம் குறித்த விபரங்களை, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் அளிக்கும்படி வருமான வரித் துறை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-அக்-202206:52:14 IST Report Abuse
Natarajan Ramanathan இது தவறு. என்னதான் கணவன்‌ மனைவி என்றாலும் ஒரு அரசு நிறுவனம் எப்படி அடுத்தவர் உரிமையில் தலையிடலாம்?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-அக்-202206:33:49 IST Report Abuse
D.Ambujavalli கணவரின் 'நேர்மையான' வருமானம் தெரிந்து அதற்குள் குடும்பம் நடத்தினால் வேண்டாத லஞ்சம், ஊழல்களைக் குறைக்கலாம்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-அக்-202201:09:27 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சம்பள வருமானத்தை மனைவியிடம் காட்டுவான். லஞ்ச வருமானத்தை சின்ன வீட்டில் கொட்டுவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X