தேவகோட்டை : சருகணி இதயா மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் நவீன மேம்படுத்தப்பட்ட பொருட்கள் பயன்பாடு பற்றிய ஆய்வரங்கம் நடந்தது. முதல்வர் ஜோதிமேரி தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
பேராசிரியை ஹெலன் வரவேற்றார். உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பயன்பாடுகளின் உண்மை தன்மைக்கான சிறிய சாதனங்களை உருவாக்குதல், புதுமையான தயாரிப்பில் மேம்பட்ட பொருட்கள் பயன்பாடு ஆராய்ச்சி பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வரங்கில் ஸ்வீடன்விஞ்ஞானி விஜய் சங்கர் அசோகன், பேராசிரியர் பிச்சைமணி வீரக்குமார், காரைக்குடி கல்லூரிஆராய்ச்சி ஆலோசகர் சந்திரமோகன், பேராசிரியர்கள் ரவிச்சந்திரன்,கண்ணா பேசினர்.