ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் நகராட்சியை சிறந்த நகராட்சியாக மத்திய அரசு தேர்வு செய்து அதற்கான விருதை மத்திய அமைச்சர் வழங்கினார்.
பிரதமர் மோடி தூய்மை இந்தியா நகர்புற இயக்கத்தை துவக்கி வைத்தார். அதன்படி மத்திய நகர்புற வீட்டு வசதி துறை அமைச்சகம் சார்பில் 50 ஆயிரத்திற்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மை, நகர்புற வளர்ச்சி கட்டமைப்புகளை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நகராட்சிகளை தேர்வு செய்து விருது வழங்குகிறது.
தூய்மை இயக்கத்தின் ஓராண்டு நிறைவு விழா சமீபத்தில் டில்லியில் நடந்தது. இதில் புனித தலமான ராமேஸ்வரம் நகராட்சியில் தூய்மை கட்டமைப்பை சிறப்பாக செய்திருந்ததால் மத்திய அரசு சிறந்த நகராட்சியாக தேர்வு செய்தது. அதற்கான விருதை மத்திய அமைச்சர் கவுல் கிஷோர், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கானிடம் வழங்கினார். விழாவில் நகராட்சி கமிஷனர் கண்ணன், கவுன்சிலர்கள் முகேஷ்குமார், முருகன், சத்தியமூர்த்தி பங்கேற்றனர்.