முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பேரூராட்சி த.மு.மு.க., மற்றும் ம.ம.க., புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் வாவா ராவுத்தர் தலைமை வகித்தனர்.
நகர தலைவர் சேட் ஜாகிர் உசேன், த.மு.மு.க., செயலாளர் அப்துல்ரஹ்மான், ம.ம.க.,செயலாளர் முகமது அலி, பொருளாளர் முகைதீன் அப்துல்காதர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பின், ஆலோசனை கூட்டத்தில் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுகுளத்தூர் தேரிருவேலி சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால் அதனை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.