கருணை வேலை உரிமையல்ல: நீதிமன்றம் உத்தரவு

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி-கருணை அடிப்படையிலான வேலை என்பது சலுகையே தவிர, உரிமையல்ல என்று உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. கேரளாவில் உள்ள திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் பணியாற்றியபோது உயிரிழந்தவரின் மகள், கருணை அடிப்படையில் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதை நிறுவனம் நிராகரித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-கருணை அடிப்படையிலான வேலை என்பது சலுகையே தவிர, உரிமையல்ல என்று உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.



latest tamil news



கேரளாவில் உள்ள திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் பணியாற்றியபோது உயிரிழந்தவரின் மகள், கருணை அடிப்படையில் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதை நிறுவனம் நிராகரித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அவருடைய கோரிக்கையை ஏற்று கருணை அடிப்படையில் வேலை வழங்கும்படி உத்தரவிட்டிருந்தது.



இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், 1995ல் உயிரிழந்தார். அப்போது அவருடைய மனைவி வேலையில் இருந்ததால், கருணை அடிப்படையில் வேலை கேட்கவில்லை. அப்போது குழந்தையாக இருந்த அந்த ஊழியரின் மகள், தற்போது, கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.


latest tamil news



கருணை அடிப்படையிலான வேலை என்பது, ஒருவர் உயிரிழக்கும்போது, அவருடைய குடும்பம் வருமானத்துக்கு வழியில்லாமல் திண்டாட கூடாது என்பதற்காக வழங்கப்படுகிறது.வேலைவாய்ப்பில் சம உரிமை தர வேண்டும், சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றே என்று அரசியல் சாசனம் கூறுகிறது.



ஆனால், கருணை அடிப்படையிலான வேலை வழங்குவதில் அரசியல் சட்டத்தின், 14 மற்றும் 16ம் பிரிவுகள் இந்த நிபந்தனைகளை கூறவில்லை.கருணை அடிப்படையிலான வேலை என்பது ஒரு சலுகையே தவிர, அது உரிமையில்லை. அதனால், இந்தப் பெண்ணுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-அக்-202212:03:48 IST Report Abuse
அப்புசாமி அப்பா செத்துப் போகும்போது குழந்தைக்கு 5 வயசுதான். அப்பவே வேலை கேட்டிருந்தா வேலைபோட்டு குடுத்திருப்பாங்க இந்த நீதியரசர்கள். இப்போ டூ லேட்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
04-அக்-202211:31:31 IST Report Abuse
சீனி கருணை அடிப்படையிலும் பல மோசடிகள் உள்ளன. நல்ல அரசு சம்பளத்தில் இருக்கும் டாஸ்மாக் குடிகாரர்கள் பலர் 50வயதில் அதிக குடியின் பலனாக உடல்நலமில்லாமல் இறந்துவிட்டால், உடனே வாரிசுக்கு வேலை என்ற நிலையில் அரசு தள்ளப்படுகிறது. சிலர், மகனுக்கு வேலைகிடைக்கும் என தூக்கில் தொங்கியவர்களும் உள்ளனர். எனவே விபத்து மற்றும் எதிர்பாராமல் இறக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு வேலை கொடுக்கலாம். அதுவும், அதே குடும்பதில் வேறு ஒருவருக்கு அரசு வேலையில்லைனில் கருணை அடிப்படையில் வேலை தரவேண்டும். இல்லையெனில், படித்துவிட்டு வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
04-அக்-202208:49:50 IST Report Abuse
MARUTHU PANDIAR தெளிவில்லாத கருணை அடிப்படை வேலை வாய்ப்பு விதிகள் ஆங்கிலத்தில் ஒன்று சொல்வதுண்டு, அதாவது O-P-R என்று.-OBLICATION, PRACTICE, RULE என்பதாக போனால் போகட்டும் என்று தொடங்கியது இன்று நடைமுறையாகி, போகிற போக்கில் சட்டமாக -(எழுதப் படாத) ஆகி வருகிறது. வேலை வாய்ப்பு என்பது குடும்ப உரிமை சாசனம் ஆக மாற்றப் பட்டு சில தொழிற் சங்க ஆசாமிகள் மூலம் தான் இப்படி மாறி வந்துள்ளது அதுவும் அரசுத்துறை என்றால் இவர்களது ஆட்டம் சொல்லவே வேண்டாம் வேலைக்கேற்ற தகுதி இருக்கிறதோ இல்லையோ குடும்ப வாரிசாக இருந்தால் போதும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X