மும்பைமஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சி பிளவுபட்ட பின், முதல்முறையாக இரண்டு அணிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க நவம்பர் இடைத்தேர்தலில் மோதுகின்றன.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேருடன், தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார்.
![]()
|
இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மையை இழந்த முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்தார்.யார் உண்மையான சிவசேனா என்பதிலும், அக்கட்சியின் வில் - அம்பு சின்னத்தை கைப்பற்றுவதிலும் இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பு மனுக்களையும் தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது.இந்நிலையில், மும்பை மாநகரின் அந்தேரி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ., ரமேஷ் லாத்கே சமீபத்தில் காலமானார்.
இதையடுத்து, அந்த தொகுதிக்கு நவ., 3ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில், ஆளும் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., தரப்பில் இருந்து முர்ஜி படேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுஉள்ளார். சிவசேனா தரப்பில், மறைந்த ரமேஷ் லாத்கேவின் மனைவி ருத்துஜா லாத்கே போட்டியிடுகிறார்.சிவசேனா பிளவுக்கு பின், யாருக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க, இரு அணிகளுக்கும் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், வெற்றி பெற இரு தரப்பும் கடும் முயற்சியில் இறங்கியுள்ளன.