பள்ளியில் ஜாதிய வன்கொடுமை: மாணவர்கள் கலெக்டரிடம் புகார்

Added : அக் 04, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஜாதிய வன்கொடுமை நடப்பதாக மாணவர்கள் கலெக்டர், முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.சிவகாசி பேராபட்டி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கலெக்டர் மேகநாதரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் அளித்த மனு: எங்கள் பள்ளியில் பட்டியல் இன மாணவர்களை காலணி அணிந்து வரக்கூடாது, பள்ளியின் வாசலுக்கு வெளியே நின்று சாப்பிட
பள்ளியில் ஜாதிய வன்கொடுமை: மாணவர்கள் கலெக்டரிடம் புகார்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஜாதிய வன்கொடுமை நடப்பதாக மாணவர்கள் கலெக்டர், முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.



சிவகாசி பேராபட்டி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கலெக்டர் மேகநாதரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் அளித்த மனு: எங்கள் பள்ளியில் பட்டியல் இன மாணவர்களை காலணி அணிந்து வரக்கூடாது, பள்ளியின் வாசலுக்கு வெளியே நின்று சாப்பிட வேண்டும் என்கின்றனர். மேலும் 2 கி.மீ., தூரம் சென்று குடிநீர் எடுத்து வருதல், குப்பை அள்ளுவது போன்றவற்றிலும் மாணவர்களை ஈடுபடுத்துகின்றனர்.



பள்ளி சார்பாக சுற்றுச்சூழல் மன்றம் நடந்துள்ளது. இதற்கு 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை மட்டும் அழைத்து சென்றனர். 10ம் வகுப்பு மாணவர்கள் அழைத்து செல்லப்படவில்லை. மாணவர்களை ஜாதியை சொல்லி ஆசிரியை திட்டுகிறார். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.



சி.இ.ஓ., ஞானகவுரி கூறியதாவது:பள்ளியில் விசாரித்த வரை ஜாதிய நோக்குடன் ஆசிரியை நடந்ததாக பெரும்பாலானோர் கூறவில்லை. மாணவர் ஒருவர் பெற்றோர் விருப்பத்துடன் மாற்று சான்றிதழ் வாங்கி உள்ளார் என்பதற்காக ஆவணங்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரிக்கப்படும், என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
04-அக்-202213:50:11 IST Report Abuse
sankaranarayanan எங்கே எங்கள் குருமா? அவரோட வெறுமா சென்று நீதி தருமா என்று கேளுங்கள். குருமா செய்துகொடுத்து இறுமா உடன் அனுப்புவார். நியாயம் வருமா என்று கோருமானால் பொறுமா என்றுதான் சொல்வார். நீதி எப்போது வருமா என்றால் கொஞ்ச பொறுமா என்று கூறி, மக்கள் கூட்டம் சேருமா என்பார். தாறுமாறாக பேசுமா என்றால் இது இப்போதைக்கு தீருமா அல்லது தேறுமா என்று கூறி நடைகட்டிவிடுவார் .
Rate this:
Cancel
srinivasanperumal - perumalpuram ,இந்தியா
04-அக்-202213:10:20 IST Report Abuse
srinivasanperumal ஒழுக்கம் எனப்படும் நன்னடத்தையே "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் ஒருவருக்கு சிறப்பைக் கொடுப்பதாக இருப்பதால் அந்த ஒழுக்கமே உயிரைவிடவும் போற்றத்தக்க சிறப்புடையதாகும்
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
04-அக்-202211:43:48 IST Report Abuse
vadivelu தூண்டி விடறவன் வெளியிலே கிரிப்டோவா திரியறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X