அமித் ஷா வருகைக்காக ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு!

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | |
Advertisement
ஜம்மு-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையையொட்டி, ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, சமீபத்தில் இரண்டு பயங்கரவாத சம்பவங்கள் நடந்ததை அடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் பயணமாக ஜம்மு - காஷ்மீருக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


ஜம்மு-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையையொட்டி, ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.latest tamil newsஇங்கு, சமீபத்தில் இரண்டு பயங்கரவாத சம்பவங்கள் நடந்ததை அடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் பயணமாக ஜம்மு - காஷ்மீருக்கு நேற்று மாலை சென்றடைந்தார். இன்றும், நாளையும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.கண்காணிப்பு


புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஒரு சிறப்பு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்; சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.இதற்கு முன்னதாக, உதம்பூரில் உள்ள பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பஸ்கள், வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்டன.இந்த சம்பவத்தில், இரண்டு பேர் காயம் அடைந்தனர்.இதற்கிடையே, அதிக அளவு ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் சிலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.இந்த சூழ்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு அமித் ஷா பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஜம்மு - பூஞ்ச், ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலைகளில் தீவிர தணிக்கைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாகவும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.தன் பயணத்தின்போது, ஜம்மு பிராந்தியத்தின் ரஜோரி மற்றும் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லாவில் நடக்கும் இரண்டு பொதுக் கூட்டங்களில் அமித் ஷா பங்கேற்க உள்ளார்.'கடந்த வாரங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், ஜம்மு - காஷ்மீரில் பொதுவாக அமைதி நிலவுகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது' என போலீசார் தெரிவித்தனர்.நவராத்திரியின் கடைசி நாளான இன்று, வைஷ்ணவி தேவி கோவிலில் அமித் ஷா வழிபடுகிறார். இதைத் தொடர்ந்து, ரஜவுரியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.ஆலோசனை


தன் பயணத்திற்கு இடையில், குஜ்ஜார், பகாரி இனப் பிரதிநிதிகளுடனும், பா.ஜ., நிர்வாகிகளுடனும் அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.இதைத் தவிர, ஜம்முவில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து, துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவுடனும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.latest tamil news


அமித் ஷாவின் இந்தப் பயணம் குறித்து, ஜம்மு - காஷ்மீர் பா.ஜ., தலைவர் ரவீந்திர ரெய்னா கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுத்து, அறிவிக்க முடியும். இது குறித்து அமித் ஷா எந்த அறிவிப்பையும் வெளியிட மாட்டார். அதே சமயம், எந்த நேரத்தில் தேர்தல் நடந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


இட ஒதுக்கீடு அறிவிப்பாரா?

ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த பகாரி இன மக்கள், எஸ்.டி., பிரிவில் தங்களை சேர்க்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல, குஜ்ஜார் இன மக்களும், எஸ்.டி., பிரிவில் தங்களை சேர்க்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.தன் பயணத்தின்போது, இந்தப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அமித் ஷா அறிக்கை வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X