ஹைதராபாதில் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு சதி முறியடிப்பு

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
திருப்பதி---ஹைதராபாதில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த குண்டு வெடிப்பு சதியை போலீசார் முறியடித்ததுடன் இதற்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ஜாஹித் உள்ளிட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானாவின் ஹைதராபாதில் குண்டுவெடிப்பு நடத்த, பயங்தரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சோதனைஇதன் அடிப்படையில் தனிப்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



திருப்பதி---ஹைதராபாதில் பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த குண்டு வெடிப்பு சதியை போலீசார் முறியடித்ததுடன் இதற்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ஜாஹித் உள்ளிட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.




latest tamil news


தெலுங்கானாவின் ஹைதராபாதில் குண்டுவெடிப்பு நடத்த, பயங்தரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சோதனைஇதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் கூட்டாக இணைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் சோதனையில் ஈடுபட்டனர்.



இந்த சோதனையில், மலக்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ஜாஹித் மோட்டு, 39, சைதாபாதைச் சேர்ந்த சமீயுதீன் என்கிற அப்துல்சமி, 40, மெஹிதிப்பட்டினத்தைச் சேர்ந்த மாஸ் ஹசன் பாரூக், 29, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 2005ல் ஹைதராபாத் நகர காவல்துறை ஆணையர் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் உட்பட பல வழக்குகளில் அப்துல் ஜாஹித்திற்கு தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.



இவர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்புடனும் தொடர்பில் இருந்துள்ளார்.ஐ.எஸ்.ஐ., பயிற்சிகைது செய்யப்பட்டவர்கள் குறித்து போலீசார் கூறியதாவது: அப்துல் ஜாஹித் உள்ளிட்ட மூவரும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த, பாக்.,கின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு வாயிலாக பயிற்சி பெற்றது தெரிய வந்துள்ளது.



latest tamil news


விசாரணைக்குப் பின், அப்துல் ஜாஹித்திடம் இருந்து இரண்டு கையெறி குண்டுகள், 3.90 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன.சமீயுதீனிடம் இருந்து ஒரு கையெறிகுண்டு, 1.50 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு மொபைல் போன்; மாஸ் ஹசனிடம் இருந்து ஒரு கையெறி குண்டு, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு போலீசார் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-அக்-202215:39:58 IST Report Abuse
Ram pollachi இவர்கள் எல்லாம் சஜ்ஜனார் கண்ணில் படவில்லையா?
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
04-அக்-202213:07:20 IST Report Abuse
Fastrack வீட்ல வெடி வைக்கிற பழக்கம் கிடையாதோ
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
04-அக்-202208:03:54 IST Report Abuse
W W இந்த குற்றங்களுக்கு அரபு ராஜ்ஜியதில் என்ன தண்டனை கிடைக்குமோ, அதே தண்டனை கொடுக்கப்படவேண்டும்,அவர்களும் அதனை மனமுவந்து ஏற்றுகொள்வார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X