மின் கட்டண உயர்வால் அரசுக்கு செலவு அதிகரிப்பு

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை- இலவச மின்சாரத்திற்காக மின் வாரியத்திற்கு நடப்பு நிதியாண்டில், 12 ஆயிரத்து 558 கோடி ரூபாய் மானியமாக வழங்க, தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. விவசாயம், குடிசை வீடுகளுக்கு முழுதும் இலவசமாகவும்; விசைத்தறி, கைத்தறி, பொது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை- இலவச மின்சாரத்திற்காக மின் வாரியத்திற்கு நடப்பு நிதியாண்டில், 12 ஆயிரத்து 558 கோடி ரூபாய் மானியமாக வழங்க, தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.




latest tamil news


தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. விவசாயம், குடிசை வீடுகளுக்கு முழுதும் இலவசமாகவும்; விசைத்தறி, கைத்தறி, பொது வழிபாட்டு தலம், சில கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவு தொகையை, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்குகிறது.



இதற்காக, ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப வர வேண்டிய மானிய அறிக்கையை, மின் வாரியம் தயாரித்து, ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பும். அதை மதிப்பீடு செய்து, ஆணையம் ஒப்புதல் அளிக்கும். அந்த மானிய தொகையை அரசு விடுவிக்கும்.மின் வாரிய கோரிக்கையை ஏற்று, செப்., 10 முதல் மின் கட்டணத்தை உயர்த்தி ஆணையம் உத்தர விட்டது. இதனால், இலவசம் மற்றும் மானிய மின்சாரத்திற்கு, அரசு வழங்கும் மானிய செலவினமும் அதிகரித்துள்ளது.


latest tamil news



நடப்பு நிதியாண்டில் வீடுகளுக்கு 5,284 கோடி ரூபாய்; விவசாயம் 5,927 கோடி; குடிசை வீடுகள் 288 கோடி; வழிபாட்டு தலங்கள் 15 கோடி; விசைத்தறி 431 கோடி; கைத்தறி, 6 கோடி; கூட்டுறவு சங்கம் 55 கோடி ரூபாய் என, 12 ஆயிரத்து 8 கோடி ரூபாய் மானியம் வழங்க, ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.இதனுடன், 2020 - 21ல் கூடுதலாக வழங்க வேண்டிய, 550 கோடி ரூபாய் சேர்த்து, நடப்பு நிதியாண்டு மொத்தம், 12 ஆயிரத்து 558 கோடி ரூபாய் மானியம் வழங்க, ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.



இதுவே 2021 - 22 நிதியாண்டு மானியமாக, 8,932 கோடி ரூபாய் தான் வழங்கப்பட்டது. தற்போது, மின் கட்டண உயர்வால் அரசுக்கு 3,626 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் மானிய செலவு ஏற்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
04-அக்-202209:36:46 IST Report Abuse
M S RAGHUNATHAN சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும் மானியம் உண்டு. ஆனால் ஹிந்து கோயில்களுக்கு Commercial rate. அது தான் TNEB கொள்கை. விடியல். அரசின் SECULARISM.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
04-அக்-202209:19:32 IST Report Abuse
Girija இவர்கள் அகௌண்டிங் சிஸ்டமே சரியில்லை, தனியாரிடம் ஒப்படைத்தால் நல்லது. மின் கொள்முதல் முதற்கொண்டு குழப்பம். நிலக்கரி கொள்முதலில் கொள்ளை, இத்தனைக்கும் நிலக்கரியை தனியார் பயன்படுத்துவதில்லை, பின் எப்படி கொள்ளை என்று யோசிக்கின்றீர்களா? ஹேண்ட்லிங் சார்ஜ்ஸ் என்று கொள்ளை அடிக்கின்றனர். உதாரணமாக ஒரு டன் நிலக்கரியை அனல் மின்நிலையத்திற்கு துறைமுகம் அல்லது ரயில்வே யார்டு என்று இருந்த்ததால், ஒன்றரை டன் கொண்டு வருவதற்கான லாரிகள் பயன்படுத்தப்பட்டதாக கணக்குக் காட்டுகின்றனர். தொடந்து தினந்தோறும் நிலக்கரி வரத்து வந்து கொண்டிருப்பதால் செக் செய்ய முடியாது, கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடி போல்தான், அந்த இன்னொன்னு தான் இது என்பர்.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
04-அக்-202208:00:32 IST Report Abuse
Ravichandran Narayanaswamy ஸ்டாலின் கருணாநிதியைவிட 100 மடங்கு கொடியவர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. திமுகவின் அமைச்சர்கள், இத்துப்போன கூட்டணி தலைவர்கள் வாய்க்குவந்தப்படி உளறி மக்களை புறக்கணிக்கிறார்கள். அவர்கள் பெரும்பான்மையை பகைத்துக்கொண்டு ஆட்சிக்கு வரலாம் என்று இனி திருட்டுக்கணக்கு போடமுடியாது-அது செல்லாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை திமுக நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X