வார்டு பணிகளில் 'கெத்து' காட்டும் தி.மு.க., கவுன்சிலர்களின் கணவர்கள்!

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி வார்டுகளில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் வளர்ச்சி பணிகளில் தி.மு.க. கவுன்சிலர்களின் கணவர்கள், உறவினர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமஉரிமை அளிக்க வேண்டும் என்று தான் மாநகராட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க.வின் பெண் கவுன்சிலர்கள் கவுன்சில்
ADMK, DMK, Sellur Raju

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : மதுரை மாநகராட்சி வார்டுகளில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் வளர்ச்சி பணிகளில் தி.மு.க. கவுன்சிலர்களின் கணவர்கள், உறவினர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமஉரிமை அளிக்க வேண்டும் என்று தான் மாநகராட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க.வின் பெண் கவுன்சிலர்கள் கவுன்சில் கூட்டத்திற்கு வருவதோடு சரி. வார்டில் என்ன வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கிறது என்று கவனிப்பதில்லை. கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு அதிகம் இருப்பதாக அ.தி.மு.க. குற்றம்சாட்டுகிறது.latest tamil news


நகர் செயலாளர் செல்லுார் ராஜூ கூறியதாவது: கவுன்சிலர்களுக்கு பதிலாக கணவர்கள் தான் வார்டுகளில் வலம் வருகிறார்கள். நேற்று கூட மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 76வது வார்டு பெருமாள் தெப்பத்தில் துாய்மை பணி நடந்தது. அங்கு மண்டல தலைவர் பாண்டிச்செல்வி வரவில்லை. அவரது கணவர் மிசா பாண்டியன், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் ஆகியோர் தான் வந்திருந்தனர். இனியும் தி.மு.க. பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் உறவினர்கள் மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தலையிட்டால் அதை எதிர்த்து அ.தி.மு.க. நிச்சயம் போராட்டம் நடத்தும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
04-அக்-202207:31:32 IST Report Abuse
Ravichandran Narayanaswamy திமுக பெண்களை எவ்வளவு மதிக்கும் என்பதற்கு, மகளை மணந்தவனும், பல பெண்களை மணந்தவனும் இருந்தார்களே, அது போதாதா? என்னமோ பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக பெண் கவுன்சிலர்களை தேர்தலில் போட்டியிடவைத்து பிறகு ரௌடி கணவர்கள் அறிவாளோடு மக்களை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேயர் என்ன பொம்மைமாதிரிதானே ரோபோ போல இயங்குகிறார். அவரால் ஒரு வார்த்தை திமுகவின்தணிக்கையில்லாமல் பேசமுடியுமா? ஏண்பெண்களின் புடவைக்கு பின்னால் ஒளிந்துக்கொண்டு தேர்தலில் ஓட்டு கேட்கிறீர்கள். சாலை பணிகள், துப்புரவு எல்லாமே தொய்வை தான் எட்டியிருக்கின்றன. எங்குபார்த்தாலும் சென்னை முழுவதும் கருணாநிதி குடும்ப போட்டோக்களை எதற்கு மக்கள் பார்க்கவேண்டும். மக்கள் நல்லவர்களாக இருக்கவேண்டாமா?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-அக்-202206:30:32 IST Report Abuse
D.Ambujavalli It is common in this unique 'model' that husbands/ male members in front and wives ruling husbands from behind
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-அக்-202206:26:40 IST Report Abuse
Mani . V மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தாசில்தார்கள் இது போன்று அட்ரா சிட்டி செய்யும் கவுன்சிலர்கள் பதவியை பறிக்க வேண்டியதுதானே? அவர்களுக்கு அந்த அதிகாரம் இருந்தும் ஏன் செயல்படாமல் இருக்கிறார்கள்? ஜாலியாக பொழுதை கழிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X