ஆண்டுக்கு 4 முறை மாணவர்கள் ரத்த தானம் செய்யலாம்! பற்றாக்குறையால் நோயாளிகள் 'ரத்த கண்ணீர்'

Added : அக் 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மதுரை : கல்லுாரிகள் விடுமுறையின் போது மாணவர்கள் இன்றி ரத்ததானத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதாக மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி அலுவலர் டாக்டர் சிந்தா தெரிவித்தார்.அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு 21 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. இந்தாண்டு ஜன., முதல் செப்., வரை 15 ஆயிரத்து 800 யூனிட்கள் கிடைத்துள்ளன. கல்லுாரி மாணவர்களின் மூலம் 60 சதவீத அளவுக்கு ரத்தம்
Blood Donate, Students, hospital, ரத்த தானம், Madurai

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : கல்லுாரிகள் விடுமுறையின் போது மாணவர்கள் இன்றி ரத்ததானத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதாக மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி அலுவலர் டாக்டர் சிந்தா தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு 21 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. இந்தாண்டு ஜன., முதல் செப்., வரை 15 ஆயிரத்து 800 யூனிட்கள் கிடைத்துள்ளன. கல்லுாரி மாணவர்களின் மூலம் 60 சதவீத அளவுக்கு ரத்தம் பெறப்படுகிறது. பெறப்படும் ரத்தம் அரசு மருத்துவமனையில் உள்ள 90 சதவீத நோயாளிகளுக்கும், மேலுார், திருமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அனுப்பப்படுகிறது.டிச., ஏப்., மேயில் கல்லுாரிகள் விடுமுறை என்பதால் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகளுக்கு ரத்தம் கிடைப்பது அரிதாகிறது என்கிறார் டாக்டர் சிந்தா.அவர் கூறியதாவது: கல்லுாரி முகாம்கள் தான் எங்களது இலக்கு. மாணவர்கள் இல்லாவிட்டால் நோயாளிகளை காப்பாற்றுவது சிரமம். 90 சதவீதம் பேர் தன்னார்வலராக ரத்ததானம் செய்கின்றனர். புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது. அதேநேரத்தில் அவர்களுக்கு ரத்தம் அதிகளவில் தேவைப்படுகிறது. விபத்து, மகப்பேறு காலத்திலும் ரத்தத்தின் தேவை அதிகம். இதனால் தேவையும் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.latest tamil news


ஒரு நோயாளியை பார்க்க 10க்கும் மேற்பட்ட உறவினர்கள் வந்தாலும் ரத்ததானம் கேட்டால் முன்வருவதில்லை. இதுவும் பற்றாக்குறைக்கு காரணம். நோயாளிக்கு ரத்தம் செலுத்த வேண்டியிருந்தால் ரத்தவங்கியிலிருந்து அனுப்புவோம். அதற்கு பதிலாக உறவினர்கள் அதே அளவு யூனிட் எந்த ரத்த வகையாக இருந்தாலும் தரவேண்டும். அப்போது தான் பற்றாக்குறையின்றி சமாளிக்க முடியும்.ஆண்டுக்கு 4 முறை ரத்ததானம் செய்யலாம் என தெரிந்திருந்தும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ரத்ததானம் செய்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்களும் முன்வர வேண்டும், என்றார்.மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கியில் காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை ரத்ததானம் செய்யலாம். குழுவாக முன்வருபவர்கள் 98948 10331ல் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
04-அக்-202210:00:21 IST Report Abuse
veeramani இரத்த தானம் என்பது கடவுளின் அருளினால் கோடை கொடுப்பது. இதில் மாணாக்கர்கள் கொடுப்பது நன்று. எனது ஒரு கேள்வி. எந்த மதம் ஆனாலும் எவரும் கொடுக்கலாம். பழைய தரவுகளை கவனியுங்கள். ஒரு மதத்தை சார்ந்தவர்கள் ரத்தமும் கொடுப்பதில்லை, சிதைந்த உடல் உறுப்புகள் தனமும் கொடுப்பதில்லை. ஆனால் அவர்களுக்கே பா தி தேவையென தரவுகள் கூறுகின்றது. இது சரியா? ஒரு சட்டம் இயற்றலாமே?? ரத்தம் தேவையெனில் உறவினர்கள் தானம் கொடுத்தால்தான் குணப்படுத்தமுடியும் என அரசு கண்டிப்புடன் எடுத்தது கூறலாம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-அக்-202206:23:00 IST Report Abuse
Mani . V ஊர் வம்பை இழுத்து திரியும் அரசியல்வாதிகளிடம் ரத்தம் எடுக்க முயற்சி செய்யலாம்.
Rate this:
Cancel
ganesan s -  ( Posted via: Dinamalar Android App )
04-அக்-202206:10:11 IST Report Abuse
ganesan s நோயாளின் உறவினர் என்று நலம் விசாரிக்க பலர் வருவார்கள். அவர்களில் ஒருவர் கூட ரத்தம் கொடுக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X