நாளை புதிய தேசிய கட்சியை துவக்குகிறார் சந்திரசேகர ராவ்

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
ஐதராபாத்: நாளை புதிய தேசிய கட்சியை துவக்க திட்டமிட்டுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ரவ். தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார். வரப்போகும் 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்ட சந்திரசேகர ராவ், சில மாதங்களுக்கு முன் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ,
5- புதிய தேசிய கட்சி, சந்திரசேகரராவ்

ஐதராபாத்: நாளை புதிய தேசிய கட்சியை துவக்க திட்டமிட்டுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ரவ்.

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார். வரப்போகும் 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்ட சந்திரசேகர ராவ், சில மாதங்களுக்கு முன் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் , சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே என பல்வேறு எதிர்கட்சி தலைவர்களை சந்தித்தார்.


latest tamil news



இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தேசிய கட்சி துவங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து நாளை (அக்.05) தசாரா பண்டிகையையொட்டி புதிய தேசிய கட்சி குறித்த அறிவிப்பை சந்திரசேகரரராவ் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியது,
தேசிய அரசியலுக்காக கட்சி துவங்குவதால் அதற்கு ‛பாரத் ராஷ்ட்ர சமீதி' என்ற பெயரில் கட்சி துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 2 வாரத்துக்குள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டி முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறதுஉ

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
04-அக்-202214:48:28 IST Report Abuse
Vena Suna சங்கு என்று சின்னதாய் வைக்கலாம். ஏன் என்றால்,கட்சிக்கு சீக்கிரமாக சங்கு ஊதப்படும்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
04-அக்-202214:29:15 IST Report Abuse
Sampath Kumar சபாஷ் மிஸ்டர் பீன் அடித்து ஆடுங்க பிஜேபிக்கு வைத்தால் புளிய காரைங்க
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
05-அக்-202200:20:45 IST Report Abuse
Aarkayஐயோ இப்பவே கண்ண கட்டுதே புளிய கரைத்து ரசம் சாம்பார் வைத்து, அப்பளம், வடை, பாயாசத்துடன் அடுத்த தேர்தலில் வெல்லும் பாஜகவிற்கு விருந்து வையுங்கள். அதற்குள் என்ன அவசரம் சம்பத்? தேர்தலுக்கு பிறகு பாஜகவிற்கு விருந்து வைத்தால் போதும்....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-அக்-202214:05:37 IST Report Abuse
Ramesh Sargam இந்த சந்திரசேகர ராவ் துவங்கும் புதிய கட்சி புட்டுக்கினு போகணும். இவன் ஒரு சுயநலவாதி. ஒப்புக்கொள்கிறேன் almost எல்லா அரசியல் தலைவர்களும் சுயநலவாதிகள்தான். ஆனால், இவன் ஒன்றாக இருந்த ஒரு மாநிலத்தை உடைத்து, எதற்கு, தான் ஒரு மாநிலத்தின் முதல்வராக வரவேண்டுமென்கிற ஒரே சுயநலத்தில், அதற்கு ஒஸ்மானியா யூனிவர்சிட்டி மாணவர்களை பயன்படுத்தி, அவர்கள் படிப்பை கெடுத்து, கட்சி ஆரம்பித்தவுடன், அந்த புதிய மாநிலத்திற்கு முதலமைச்சரும் ஆகி, அதில் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெரிய, முக்கியமான பதவிகளை கொடுத்து, புதிய மாநிலம் உருவாகுவதற்கு மிகவும் ஒத்துழைத்த ஒஸ்மானியா யூனிவர்சிட்டி மாணவர்களை அம்போ என்றுவிட்டவன் இவன். இயன் ஆரம்பிக்கும் புது கட்சி அழியவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X