மீனவர்கள் காணாமல் போவதை தடுக்க நவீன தொழில்நுட்பம்: தமிழக அரசு

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
'கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அடிக்கடி காணாமல் போவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.புதுடில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், 'மின்னணு இந்தியா' என்ற பெயரில், அனைத்து மாநில ஐ.டி., அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இ- - அலுவலகம்இதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

'கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அடிக்கடி காணாமல் போவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.புதுடில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், 'மின்னணு இந்தியா' என்ற பெயரில், அனைத்து மாநில ஐ.டி., அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது.



latest tamil news




இ- - அலுவலகம்


இதில் தமிழக அரசின் சார்பில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று கூறியதாவது:இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், இத்தகைய மாநாடு மிகவும் முக்கியமானதாகும். இதில், பல்வேறு தலைப்புகளின் கீழ், 'டிஜிட்டல் இந்தியா' குறித்து தகவல் பரிமாற்றங்கள் நடந்தன. மாநாட்டில், தமிழகத்தில் நடைபெற்று வரும், பல்வேறு டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் பற்றியும் பேசப்பட்டது. குறிப்பாக, 'லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி' என்ற திட்டத்தின் கீழ், கிராமப் பகுதிகளுக்கும் இணைய சேவை வழங்க எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி பலரும் பேசினர். தமிழக அரசுத் துறைகளின் பல்வேறு வசதிகளை, அனைத்து மக்களுக்கும் 'இ - சேவை' வாயிலாக தரும் வகையில், சட்டசபை உள்ளிட்ட ஒவ்வொரு அலுவலகத்தையும், 'இ - அலுவலகம்' வாயிலாக இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில், சாதாரண மக்களுக்கும் தொழில்நுட்பத்தின் பயன்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.தமிழகத்தில் மீனவர்கள் காணாமல் போவது, அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.


latest tamil news




'ரோபோடிக் சிஸ்டம்'


இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், இந்த மாநாட்டில் சில தொழில்நுட்பங்களை பார்க்க முடிந்தது. இவற்றை தமிழகத்தில் செயல்படுத்த, மீன் வளத் துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.சுகாதாரத் துறையிலும், நவீனத்தை புகுத்தக் கூடிய வகையில், பல கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. விவசாயத் துறைக்கு 'ட்ரோன்' மற்றும் தொழில்துறைக்கு 'ரோபோடிக் சிஸ்டம்' என நிறைய தொழில்நுட்பங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. இவற்றை ஆய்வு செய்து தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



- நமது டில்லி நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
04-அக்-202209:37:49 IST Report Abuse
vijay விடியல் விடியல் என்று சொன்னீங்களே, அத சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தீங்கப்பு. அந்த விடியலை காணோம் என்று தொழில்நுட்பத்த வாசிச்சு கண்டுபிடிங்கோ
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
04-அக்-202208:35:04 IST Report Abuse
Viswam டிஜிட்டல் இந்தியான்னு பிரதமர் ஏழு வருஷம் முன்பு சொல்லி அதற்கு முயற்சி எடுத்த பொது நொட்டைநொச்சு சொன்ன கூட்டம் இப்ப பெருசா பேசறாங்க.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-அக்-202205:05:32 IST Report Abuse
Kasimani Baskaran என்னதான் இ-செர்வீஸ் வந்தாலும் மூலப்பத்திரத்தை கண்டுபிடிக்க முடியவேயில்லையாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X