சுற்றுலா பயணியர் மத்தியில் மஞ்சப்பை விழிப்புணர்வு

Added : அக் 04, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஊட்டி-ஊட்டியில் இரண்டாம் சீசனையொட்டி, மஞ்சப்பை குறித்து மலர் தொட்டிகளால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இரண்டாவது சீசன் களை கட்டியுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 4 லட்சம் செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.அதில், டேலியா, சால்வியா, இன்கா மேரிகோல்டு, பிகோனியா, ஜெரேனியம் என, 70 வகை செடிகள் வாயிலாக, 15 ஆயிரம் மலர் தொட்டிகள்
சுற்றுலா பயணியர் மத்தியில் மஞ்சப்பை விழிப்புணர்வு



ஊட்டி-ஊட்டியில் இரண்டாம் சீசனையொட்டி, மஞ்சப்பை குறித்து மலர் தொட்டிகளால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இரண்டாவது சீசன் களை கட்டியுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 4 லட்சம் செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.அதில், டேலியா, சால்வியா, இன்கா மேரிகோல்டு, பிகோனியா, ஜெரேனியம் என, 70 வகை செடிகள் வாயிலாக, 15 ஆயிரம் மலர் தொட்டிகள் மாடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாறுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இயற்கை வேளாண்மையை நோக்கி என்ற வாசகம், 2,000 மலர் தொட்டிகளால் திடலில் வடிவமைக்கப்பட்டுஉள்ளது.கடந்த 1 முதல் சுற்றுலா பயணியர் இவற்றை பார்வையிட்டு வருகின்றனர்.



இந்நிலையில், நீலகிரியை 'பிளாஸ்டிக்' இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரணி இல்லம் புல்வெளி மைதானத்தில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மஞ்சப்பை பயன்படுத்தும் விதமாக, 5,000 மலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன.இத்தகைய சிறப்பு மலர் அலங்காரத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து, பார்வையிட்டார். கலெக்டர் அம்ரித், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
04-அக்-202208:31:59 IST Report Abuse
duruvasar கரெக்ட். பேப்பரை விட பையை சுருட்டி செல்லமாக மண்டையின்மேல் அடித்தால் நல்ல சுரீர் என விழும். மஞ்சள் கலர் பனியன் போட்டுக்கொண்டால் மஞ்சு விரட்டடில் கலந்துகொள்ளலாம். விழாவில் கலந்துகொள்ள வந்த எம்குல பெண்களுக்கு மஞ்சள் ஃபை கொடுத்தாயா என வீரவசனம் பேசலாம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-அக்-202206:37:00 IST Report Abuse
Mani . V மஞ்சப்பை என்றவுடன் திருக்குவளை நினைவுக்கு வராமல் இருந்தால் சரிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X