மூணாறு அருகே மீண்டும் 5 பசுக்களை கொன்ற புலி: பணிகளை புறக்கணித்த தொழிலாளர்கள்

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மூணாறு---மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான நயமக்காடு எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனில் பசுக்களை அடைக்கப்பட்டிருந்த கட்டடத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த புலி மேலும் ஒரு கன்று உட்பட ஐந்து பசுக்களை கொன்றது. அங்கு அக்., 1 இரவு பசுக்களை அடைக்கும் கட்டடத்திற்குள் நுழைந்த புலி ஒரு கன்று உட்பட 5 பசுக்களை கொன்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்ட

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மூணாறு---மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான நயமக்காடு எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனில் பசுக்களை அடைக்கப்பட்டிருந்த கட்டடத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த புலி மேலும் ஒரு கன்று உட்பட ஐந்து பசுக்களை கொன்றது.latest tamil news


அங்கு அக்., 1 இரவு பசுக்களை அடைக்கும் கட்டடத்திற்குள் நுழைந்த புலி ஒரு கன்று உட்பட 5 பசுக்களை கொன்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்ட இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ரேஞ்சர் அருண் மகாராஜா தலைமையில் 20 வனக்காவலர்கள் இரு குழுக்களாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.பசுக்கள் இறந்து கிடக்கும் கட்டடத்திற்கு புலி கட்டாயம் வரும் என்ற எதிர்பார்ப்பில் வனத்துறையினர் காத்திருந்திருந்தபோது, அவர்களை ஏமாற்றிய புலி அதன் அருகே பசுக்கள் அடைக்கப்பட்டிருந்த வேறொரு கட்டடத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:45 மணிக்கு நுழைந்து பசுக்களை தாக்கியது.பசுக்களின் அலறல் சப்தம் கேட்டு கட்டடத்திற்குள் வில்சனின் தந்தை சாலமன், தாயார் ராஜபுஷ்பம் ஓடி சென்று கதவை திறந்தபோது புலி பசுக்களை தாக்கிக் கொண்டிருந்தது. அச்சமடைந்தவர்கள் அங்கிருந்து திரும்பியபோது புலி தப்பியது. அதனை வனத்துறையினரும் நேரில் பார்த்தனர். புலி தாக்கியதில் வேல்முருகன், அந்தோணி, வில்சன், பழனிசாமி ஆகியோரின் ஒரு கன்று உட்பட ஐந்து பசுக்கள் இறந்தன. இரண்டு பசுக்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பின.மீண்டும் வந்த புலி


அந்த அதிர்ச்சியில் இருந்து தொழிலாளர்கள், வனத்துறையினர் மீளும் முன்பு அக்.,1 இரவில் புலி நுழைந்த கட்டடத்திற்கு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு புலி மீண்டும் வந்தது. அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை நோக்கி பாய்ந்த புலியை பட்டாசு வெடித்து விரட்டி உயிர் தப்பினர்.


வேலை நிறுத்தம்


இரண்டு நாட்களில் இரண்டு கன்றுகள் உட்பட 10 பசுக்களை புலி கொன்றதால் அதனை பிடிக்கக்கோரி நயமக்காடு, கன்னிமலை, கடலார் எஸ்டேட்டுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை.


முகாம்


சம்பவம் நடந்த பகுதியில் மூணாறு டி.எப்.ஓ., ராஜூ கே. பிரான்சிஸ் தலைமையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். புலியை பிடிக்க மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூண்டுகள் வைக்கப்பட்டன. புலியின் கால் தடங்களை வைத்து அதனை தேடும் பணியில் நேற்று வனத்துறையினர் இரு குழுக்களாக ஈடுபட்டனர்.


இழப்பீடு


புலியின் தாக்குதலில் பலியான பசுக்களின் உரிமையாளர்களுக்கு வனத்துறை சார்பில் முதல்கட்ட இழப்பீட்டு தொகை பசுக்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதமும் கன்றுக்கு ரூ.10 ஆயிரமும் ஊராட்சி தலைவர் பிரவீணா நேற்று வழங்கினார். சம்பவம் நடந்த பகுதியில் குடியிருப்பு பகுதி வரை புலி நடமாடுவதால் குழந்தைகளை வெளியில் விடக்கூடாது என்றும் தீயை கண்டு புலி அச்சப்படும் என்பதால் இரவில் வீடுகளுக்கு முன்பு தீயிடுமாறும் ஊராட்சி சார்பில் ஸ்பீக்கர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதே கோரிக்கையை தோட்ட நிர்வாகம் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.


latest tamil news
சந்தேகம்


அங்கு நடமாடும் புலி குட்டிகளுக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கும் வகையில் பசுக்களை தாக்கியிருக்கலாம் அல்லது வெறி பிடித்திருக்கலாம் அல்லது வாயினுள் ஏதாவது புண் ஏற்பட்டு கொன்ற பசுக்களின் மாமிசத்தை தின்ன இயலாமல் மீண்டும், மீண்டும் பசுக்களை கொன்று இருக்கலாம் என வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.


தவிப்பு


புலியின் நடமாட்டத்தால் அச்சத்தில் தொழிலாளர்களும், அதனை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வனத்துறையினரும் துாக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். இன்று (நேற்று) இரவுக்குள் புலியை கட்டாயம் பிடித்து விடுவோம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இல்லாதபட்சத்தில் அனைத்து அரசியல் கட்சி சார்பில் தொழிலாளர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-அக்-202207:28:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் . ஐயப்பா இது என்ன சோதனை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X