இது உங்கள் இடம்: பாவம்... இந்த தமிழர்கள்!

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (75) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முதல்வர் ஸ்டாலின், நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட போது, மிசாவில் கைதாகவில்லை' என்ற திடுக்கிடும் தகவலை, பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் சொல்வது உண்மையெனில்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:


'முதல்வர் ஸ்டாலின், நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட போது, மிசாவில் கைதாகவில்லை' என்ற திடுக்கிடும் தகவலை, பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் சொல்வது உண்மையெனில், 'மிசாவில் கைதாகி, ஸ்டாலின் சித்ரவதை அனுபவித்தார்' என, இத்தனை ஆண்டுகளாக 'திராவிட செம்மல்'கள் கூறி வந்தது எல்லாம் கட்டுக்கதையே!latest tamil newsஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும், ஆதவனை மறைக்க முடியாது. உண்மையை நீண்ட காலம் மறைத்து வைக்கவும் முடியாது. பொய் வேடம் நீண்ட நாள் நிலைக்காது என்பதை, தி.மு.க., தலைவர்கள் உணர வேண்டும். ஆதாரமோ, தகுந்த ஆவணங்களோ இல்லாமல், அண்ணாமலை எதையும் கூற மாட்டார்.

மிசாவில் ஸ்டாலின் சிறை செல்லவில்லை எனில், வேறு எந்த வழக்கில் சிறை சென்றார் என்பதையும், ஊர், உலகத்திற்கு அண்ணாமலை சொல்ல வேண்டும். ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் தி.மு.க.,வினர், தமிழக மக்களை முட்டாள்களாக்க, அவர்களின் அனுதாபத்தை பெற, இன்னும் என்னென்ன அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளனரோ தெரியவில்லை.


latest tamil news
ஆனாலும், அந்தக் கட்டுக்கதைகள் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும். நல்லவேளை... தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அந்தமான் செல்லுலார் சிறையில் அடைபட்டு, சித்ரவதைக்கு ஆளானார் என்று சொல்லாமல் விட்டனரே... அப்படி சொல்லியிருந்தாலும், பாவம்... இந்த தமிழர்கள் நம்பியிருப்பர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
05-அக்-202208:12:59 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஆரோக்கிய ஆரியன் அவர்களே வசதியாக முக்கிய வாக்குறுதியை மறந்து விட்டீர்களே. நீட் தேர்வு ரத்தின் ரகசியம், மாதம் தோறும் மகளிருக்கு 1000, இதுபோன்று பல. செஸ் ஒலிம்பியாட் ஒரு சாதனையாக. மனசாட்சியுடன் பேசுங்கள். டீசல் இன்று வரை குறைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் குறைந்த போதும். இதுபோன்று பல. யாரும் குறை சொல்வதற்காக சொல்லவில்லை. ஓட்டுக்காக பொய் சொல்லுவதை எதிர்க்கிறோம். 1967 முதல் ஆரம்பம். வரலாறை பாருங்கள்.
Rate this:
Cancel
Ayokkiya Ariyan - chennai,இந்தியா
05-அக்-202200:35:11 IST Report Abuse
Ayokkiya Ariyan இந்த தேர்தலில் ஸ்டாலினுக்காக ஓட்டுபோட்டவர்கள் அவர் மிசா சென்றார் என்பதற்காக போடவில்லை ,அதையும் மீறி அவர் ஆட்சிக்கு வந்தபிறகு அவர் ஆட்சி மீதான விமர்சனம் தான் தேவையே தவிர, மிசாவில் சிறை சென்றாரா இல்லையா என்பது தேவையில்லாத ஓன்று , ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறை வெற்றியிருக்கிறார் திமுக ஆட்சியில் தான் தேர்தல் அறிக்கை பற்றியும் அதை நிறை வெற்றியிருக்கிறார்களா என்பது பற்றியும் விவாதம் வரும் , ஏனெனில் அவர்கள் மட்டுமே அதை மதிக்க கூடியவர்கள் , திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்து நிறைவேற்றிய திட்டங்கள் 1 ) 2 .1 கோடி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோன நிவாரண நிதியாக ரூபாய் 4000 2 ) ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்தது 3 ) மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் 4 ) தனியார் மருத்துவமனையில் கொரோன சிகிச்சை பெற்றவர்களுக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் அரசே மருத்துவ செலவை ஏற்று கொண்டது 5 ) கூட்டுறவு சங்கங்களில் மகளீர் சுய உதவி குழுக்கல் பெற்றிருந்த 2756 கோடி ரூபாய் தள்ளுபடி 6 ) விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்து பெட்ரா கடன்கள் 5550 கோடி தள்ளுபடி 7 ) பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது 8 ) ஊரக பகுதிகள் வகர்ச்சிக்கு அண்ணா மறுஅமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1200 கோடி ஒதுக்கியது 9 ) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழை கட்டாய படம் ஆக்கி பிரமாநிலத்தவருக்கு நமது வேலை வாய்ப்பை தரை வார்த்துக்கொடுத்த முந்தய அரசின் தவறுக்கு முற்றுப்புள்ளி வைத்தது 10 ) ஸ்டெர்லைட் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கியது 11 ) ஸ்டெர்லைட் சம்பவத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது 12 ) மகளீருக்கான பேறுகால விடுப்பை 9 மதத்திலிருந்து 12 மதங்களாக்கியது 13 ) மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகையாக மாதம் ரூபாய் 1000 வழங்குவது 14 ) மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தது 15 ) கொரோநாவால் இறந்த மருத்துவர்களின் / காவலர்கள் மற்றும் முன் கல பணியாளர்கள் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய பயன் படாது து 16 ) முற்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களை இயற்றி அதை வாபஸ் பெற வைக்க அழுத்தம் கொடுத்தது 17 )குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது . என பல்வேறு நடவடிக்கைகள் கடந்த ஓராண்டில் நடை பெற்றிருக்கிறது , அதுபோல மோடியோ அல்லது அதிமுக ஆட்சியோ தான் செய்தவைகளையும் , திமுக செய்ய வேண்டியதை வலியுறுத்துவதும் ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது ,
Rate this:
Bala - chennai,இந்தியா
05-அக்-202203:25:55 IST Report Abuse
Balaடாஸ்மாக் அயோக்கிய திராவிடனின் புளுகு மூட்டைகள் 🤣🤣🤣🤣...
Rate this:
05-அக்-202203:45:24 IST Report Abuse
ஆரூர் ரங்80 சதவீத சாதனைகள் மத்திய திட்டம் மற்றும் நிதியில் ஸ்டிக்கர் ஓட்டியது🙃 என்பதை மறைக்க முடியாது. ஆனால் தானே ஒப்புக் கொண்ட சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தியது மிகப்பெரிய சாதனைதான். சென்ற மாதமே சுமார் 23 கொலை சம்பவங்கள் என்பது சும்மா இல்லை. ஒரு முழு பள்ளியை சூறையாடப்ப படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரே அரசு😶 இதுதான்....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-அக்-202222:50:27 IST Report Abuse
Ramesh Sargam "நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்' என்று கூறிக்கொண்டு நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் ஒரு படத்தில் உலாவருவார். அதேபோல் உள்ளது ஸ்டாலின் அவர்களின் செயலும் - நானும் நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட போது (emergency) மிசாவில் கைது செய்யப்பட்டேன் என்று கூறி மக்களை ஏமாற்றுவது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X