வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை- 'திறனற்ற தி.மு.க., அரசின் அராஜக போக்கால், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அமைந்துள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா, தி.மு.க., நிர்வாகியின் துாண்டுதலில் பதியப்பட்ட பொய் வழக்கால் ஏற்பட்ட மன வேதனையால் உயிரை துறந்துள்ளார். இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
![]()
|
திறனற்ற தி.மு.க., அரசின் அராஜக போக்கால், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது. இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது, தி.மு.க., அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.