'தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லையென்றால் வேறு யார் தான் இங்கு ஹிந்து?': வானதி சீனிவாசன்

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (200) | |
Advertisement
கோவை--''ஹிந்து மத கலாசாரத்தை அழித்து ஒழிக்க, பல நுாறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடக்கிறது,'' என, பா.ஜ., மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், 'திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது என்று சினிமாவில் தொடர்ந்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneகோவை--''ஹிந்து மத கலாசாரத்தை அழித்து ஒழிக்க, பல நுாறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடக்கிறது,'' என, பா.ஜ., மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
latest tamil news


அவரது அறிக்கை:வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், 'திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது என்று சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது' என, பேசியுள்ளது கண்டனத்துக்குரியது.உலகே வியக்கும் அளவுக்கு தஞ்சையில் சிவபெருமானுக்கு பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன்.அவருக்கு, 'சிவபாத சேகரன், சோழ நாராயணன், திருமுறை கண்டசோழன்' என, பல பெயர்கள் உண்டு. சோழர்கள் ஆண்ட நாடுகளில் எல்லாம், சிவபெருமானுக்கு கோவில் கட்டி உள்ளனர்.சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட தொன்மையான தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும், ஹிந்து வழிபாடு பற்றியும், சிவன், பிரம்மா, விஷ்ணு என்று ஹிந்து கடவுள்கள் பற்றியும் விரிவாகவே பேசப்பட்டுள்ளன.தமிழகம் ஹிந்துக்களின் ஆன்மிக பூமியாக இருந்து வருகிறது. அந்நிய படையெடுப்பால் இங்கு அந்நிய மதங்கள் வந்துள்ளன.சேர, சோழ, பாண்டியர்கள் கட்டிய, 30 ஆயிரம் கோவில்கள் இங்கு உள்ளன. ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளை கடந்து நம் ஹிந்து வழிபாட்டு அடையாளமாக உள்ளது.latest tamil news


இன்றும், இந்தியாவில் பிற மதங்களின் ஆதிக்கம் உள்ளது; மத மாற்றங்கள் தொடர்கின்றன.ஹிந்து மத கலாசாரத்தை அழித்து ஒழிக்க, பல நுாறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சி தான் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சு.ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை ஹிந்து அல்ல என்று சொல்லவும் துணிந்திருக்கின்றனர்.இது, ஹிந்து கலாசாரத்தை அழிக்கும் சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை என்றால், இந்த மண்ணில் வேறு யாருமே ஹிந்து இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (200)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
09-அக்-202201:25:23 IST Report Abuse
Naz Malick உங்களுக்கு ஹிந்து என்ற சொல்லை கொடுத்ததே அரபி காரர்கள் தான். பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் அந்த சொல்லை இன்னும் வரையுறித்தினார்கள். அதற்க்கு முன்பு ஹிந்து என்ற சொல்லே இல்லை.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
04-அக்-202221:47:00 IST Report Abuse
madhavan rajan தமிழர்கள் இந்துக்கள் இல்லையென்றால் அவர்கள் யாரும் SC/ST என்று கூறி பதவி பெற முடியாது. அப்போது தமிழர்களுக்கு சமூக நீதி கிடைக்காது. இதைத்தான் திராவிடம் விரும்புகிறதா?
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
04-அக்-202221:30:41 IST Report Abuse
adalarasan இவரைப்போன்ற நம் சரித்திரத்தையே பழிக்கும் மட்டமான குணம் உள்ளவர்களுக்கெல்லாம், தாங்கள் பதில் சொல்லாமல் இருப்பதே தங்களுக்கு நல்லது என்று நான் கருதுகிறேன்.காசுக்கு மாரடிப்பவர்களை ஒதுக்கவேண்டும்?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
04-அக்-202221:49:30 IST Report Abuse
madhavan rajanஊடகங்களில் அவர்கள் பேசுவது பெரிதும் பிரச்சாரமாக வெளிப்படும்போது மறுப்பு தெரிவித்துத்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் தமிழக அறிவுஜீவிகள் பலர் அவர் சொல்வதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் என்று கூட பேசுவார்கள். எப்போது ஊடகங்கள் காசுக்கு மாரடிப்பவர்களை தூக்குகிறார்களோ அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் முறை. ஒட்டகங்களிலேயே பல காசுக்கு மாரடிப்பவர்கள்தான் RSB சொன்னதுபோல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X