'ஆன்லைன்' சூதாட்ட விளம்பரம்: மத்திய அரசு எச்சரிக்கை

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: 'வெளிநாடுகளைச் சேர்ந்த 'ஆன்லைன்' சூதாட்ட தளங்கள் தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 'டிவி சேனல்கள்', இணையதள செய்தி நிறுனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மத்திய அரசின் செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம், தனியார் டிவி சேனல்கள், இணைய செய்தி நிறுவனங்கள், ஓ.டி.டி., எனப்படும் இணைய பொழுதுபோக்கு
 Online Gambling, Advertisements, OTT, மத்திய அரசு, ஆன்லைன் சூதாட்டம், ஓடிடி, Central Govt, Online Betting,

புதுடில்லி: 'வெளிநாடுகளைச் சேர்ந்த 'ஆன்லைன்' சூதாட்ட தளங்கள் தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 'டிவி சேனல்கள்', இணையதள செய்தி நிறுனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.



மத்திய அரசின் செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம், தனியார் டிவி சேனல்கள், இணைய செய்தி நிறுவனங்கள், ஓ.டி.டி., எனப்படும் இணைய பொழுதுபோக்கு தளங்களுக்கென தனித்தனியாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளிட்டுள்ளது.



latest tamil news


இதில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளைச் சேர்ந்த, ஆன்லைன் சூதாட்ட தளங்கள், இணைய செய்தி தளங்கள் என்ற பெயரில் புதிய வகையில் விளம்பரங்கள் செய்கின்றன. இந்த சூதாட்ட தளங்களின் இணைய செய்தி தளங்கள், நம் நாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி, சட்டவிதிகளுக்கு புறம்பாக விளம்பரங்கள் செய்து வருகின்றன.இந்த சூதாட்ட தளங்களின் இணைய செய்தி தளங்கள் நம் நாட்டில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை.



இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவதை, டிவி சேனல்கள், இணைய செய்தி நிறுவனங்கள், ஓ.டி.டி., தளங்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற விஷயத்தில் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.இதையும் மீறி சூதாட்ட நிறுவனங்களின் செய்தி தளங்கள் குறித்த விளம்பரங்களை வெளியிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-அக்-202214:50:29 IST Report Abuse
விஜய் உங்க Jio phoneல தாண் அவ்ளோ online சூதாட்ட sms வருது.
Rate this:
Cancel
04-அக்-202211:38:02 IST Report Abuse
அப்புசாமி சூதாட்டம் நடத்திக் கொள்ளையடிக்கலாம். ஆனா, மத்திய அரசின் அனுமதி பெற்று இந்தியாவிலெ பதிவு செய்து உருவலாம். ஜி.எஸ்.டி வசூலாகணுமில்ல.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
04-அக்-202213:51:27 IST Report Abuse
Fastrackநீங்க எவ்வளவு வேணும்னாலும் அழுத்தி சொல்லுங்க. மதுக்கடை சூதாட்டத்தை விட நல்லதா மோசமா...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
05-அக்-202200:45:26 IST Report Abuse
Aarkayஎதோ அவரது உள்ளக்குமுறலை எதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்துகிறார். பாவம் விட்டுத்தள்ளுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X