புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம்: நாராயணசாமி குற்றச்சாட்டு

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுச்சேரி: மின்துறை தனியார்மயமான பிறகும், மக்களுக்கு தொடர்ந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 2.80க்கு வழங்கப்படும் என உத்தரவாதம் கொடுக்க முடியுமா என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சியின் போது, மின் விநியோகத்தை தனியார் மயமாக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி: மின்துறை தனியார்மயமான பிறகும், மக்களுக்கு தொடர்ந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 2.80க்கு வழங்கப்படும் என உத்தரவாதம் கொடுக்க முடியுமா என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:



latest tamil news




புதுச்சேரியில் காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சியின் போது, மின் விநியோகத்தை தனியார் மயமாக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்து நாங்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.தற்போது மத்திய பா.ஜ., அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக மின் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நடைமுறையை ரங்கசாமி அரசு செயல்படுத்தி வருகிறதுஇதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மிக குறைந்த விலைக்கு தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.

இந்தியாவிலேயே புதுச்சேரியில் காங்., ஆட்சியில் மிக குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரம் கொடுத்து வந்தோம். மின்சாரத்தை ரூ. 1500 கோடிக்கு வாங்கி 1500 கோடிக்கு விற்பனை செய்தோம், இதில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழை மக்களுக்கு 200 யூனிட் இலவசமாக கொடுத்து வந்தோம். இதனால் எந்த நஷ்டமும் இல்லை. மின் விநியோகமும் சிறப்பாக நடந்து வந்தது.

தனியார்மயத்தை தொழிலாளர்கள் எதிர்த்து போராடினால் 'எஸ்மா' சட்டம் பாயும் என்கின்றனர். 'எஸ்மா' சட்டம் பாயும் என்ற அடக்கு முறை எல்லாம் ஜனநாயக நாட்டில் எடுபடாது. புதுச்சேரியில் அறிவிக்கப் படாத அவசர நிலை பிரகடனமாகி உள்ளது. கவர்னர் ராணுவத்தை இறக்கியிருக்கிறார். அரசு ஊழியர்களையும், மக்களையும் ராணுவத்தை வைத்து மிரட்டலாம் என பா.ஜ., ஆட்சியாளர்கள் கனவு காண்கின்றனர்.
மின்துறை தனியார்மயமாக்கம் குறித்து முதல்வர் வாய்மூடி மவுனியாக இருக்கின்றார். அவரது விருப்பம் இல்லாமல் மின்துறை தனியார் மயமாக்கப்படுகிறதா என்பதை முதல்வர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.


latest tamil news




காங்., கூட்டணி கட்சிகள் மின்துறை தொழிலாளர்களுக்கும் பொது மக்களுக்கும் ஆதரவாக இருப்போம்.மின்துறை தனியார்மயமானால், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது போல் ஒரு யூனிட் 18 ரூபாய் கொடுத்து புதுச்சேரி மக்கள் மின்சாரத்தை வாங்க முடியுமா. மக்களுக்கு தொடர்ந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 2.80க்கு வழங்கப்படும் என உத்தரவாதம் கொடுக்க முடியுமா.பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., இயக்கங்கள் மதக்கலவரத்தை உருவாக்கி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பேரணியில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கு காந்திக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
05-அக்-202200:47:39 IST Report Abuse
Aarkay அவருக்கும் பொழுது போக வேண்டுமில்லையா? இப்படித்தான் ஏதாவது உளறுவார். யாரும் தன்னை சீண்டுவதில்லை என்ற ஆதங்கம்.
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
04-அக்-202221:55:18 IST Report Abuse
Desi உன் கட்சி தலைவருக்கு தமிழ் தெரியாது என்ற ஒரே காரணத்திற்க்காக உல்டாவா மொழி பெயர்த்து சொன்ன நாரவாயன் நாரா தானே நீ?
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
04-அக்-202218:25:55 IST Report Abuse
Narasimhan இப்போது ராகுல் காந்தியின் மொழி பெயர்ப்பாளர் வேலையும் போய் விட்டது. அந்த ஆதங்கம்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X