விடுமுறையில் சிறப்பு வகுப்பு: தனியார் பள்ளிகளுக்கு நிபந்தனை

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : விடுமுறை நாட்களில், பொது தேர்வு மாணவர்களுக்கு அனுமதி பெற்று, சிறப்பு வகுப்பு நடத்தலாம் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வி துறை நடத்திய காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 12ம் தேதி வரையும்; அரசு பள்ளிகளின் 6ம் வகுப்பு
Special Class, Holidays, Private School, சென்னை, விடுமுறை, அரசு பள்ளி, தனியார் பள்ளி, காலாண்டு தேர்வு, Chennai, Govt School,  Quarterly Exam,School, students,

சென்னை : விடுமுறை நாட்களில், பொது தேர்வு மாணவர்களுக்கு அனுமதி பெற்று, சிறப்பு வகுப்பு நடத்தலாம் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



தமிழக பள்ளிக்கல்வி துறை நடத்திய காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 12ம் தேதி வரையும்; அரசு பள்ளிகளின் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 9ம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.



latest tamil news


தனியார் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து, எந்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வி துறை வெளியிடவில்லை. இதனால், காலாண்டு தேர்வு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறைகளை, பள்ளிகளே நிர்ணயித்துள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகள் பலவற்றில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.



இதைப் பார்த்த சில பள்ளிகள், தாங்களும் சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். அதற்கு, பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கல்வித்துறையில் அனுமதி பெற்று, சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம்; மற்ற வகுப்புகளுக்கு பெற்றோர் ஒப்புதல் இன்றி வகுப்புகளை நடத்த வேண்டாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-அக்-202209:32:58 IST Report Abuse
Bhaskaran இப்போது அரசுப்பள்ளி களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது அடுத்து தீபாவளி மூன்றுநாள் அடுத்து மழைபெய்தால் எப்படியும் பதினைந்து நாள் வாத்தியாருக்கு கொண்டாட்டம் பணிக்கு செல்லாமல் தாண்ட சம்பளம் .படங்களை வேகமாக வாசித்து ஒப்பேற்றிவிடுவார்கள் பாவம் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளியில் ரிசல்ட் முக்கியம் அவர்கள்மீது கட்டுப்பாடுகள் வாழ்க ஜாக்டோ ஜியோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X