போடியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் துவக்க ஆலோசனை

Added : அக் 04, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தெற்கு ரயில்வேயில், பெரிய நகரங்களை இணைக்கும் வழித் தடங்களில் இரட்டை பாதை வசதி உள்ளது. ரயில் வசதியுள்ள மாவட்ட நகரங்களிலும், இரட்டை பாதை வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 38 கி.மீ.,ருக்கான அகலப்பாதை
Chennai, Southern Railway,Bodi,சென்னை, தெற்கு ரயில்வே, ரயில் சேவை, போடி,  Train Services,

சென்னை : தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தெற்கு ரயில்வேயில், பெரிய நகரங்களை இணைக்கும் வழித் தடங்களில் இரட்டை பாதை வசதி உள்ளது. ரயில் வசதியுள்ள மாவட்ட நகரங்களிலும், இரட்டை பாதை வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 38 கி.மீ.,ருக்கான அகலப்பாதை பணி முடிந்து வெற்றிகரமாக சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தடத்தில் விரைவில் ரயில் சேவை துவங்க உள்ளோம். தேனி - போடி இடையே 17 கி.மீ., துாரத்திற்கான அகலப்பாதை பணிகள், இந்த மாதம் நிறைவடையும். இந்த தடத்திலும், ரயில் சேவையை துவங்க உள்ளோம். குறிப்பாக, போடியில் இருந்து சென்னைக்கு, நேரடி ரயில் சேவை துவங்குவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
04-அக்-202212:07:12 IST Report Abuse
R Hariharan நன்றி. கூடிய சீக்கிரம் போடி சென்னை ரயில் சேவை வேண்டும். குறிப்புக்காக தென் மாவட்டங்கள் நிறைய ரயில்வசதி வேண்டும். குருவாயூர் புனலூர் எப்பொழுது மதுரை வரை நீடிக்க படும். திருவந்தபுரம் சென்னை பகல் இரவு சேவை மீண்டும் தொடங்க வேண்டும்.
Rate this:
Cancel
srinivasanperumal - perumalpuram ,இந்தியா
04-அக்-202211:35:03 IST Report Abuse
srinivasanperumal ரொம்ப சந்தோசம் அய்யா குமுலி - கூடலூரில் இருந்து கம்பம் உத்தமபாளையம் சின்னமணூர் போடி தேனீ பெரியகுளம் வத்தலகுண்டு திண்டுக்கல் வழியாக சென்னை வரை இயக்கினால் ரொம்ப சிறப்பாக இருக்கும் என்பதை கூறுவதில் ஆசை படுகின்றேன் நாடு முன்னேற நாட்டை ஆளும் அரசியல் வாதிகள் முயற்சி செய்யணும் என்பது மக்களின் கருத்து
Rate this:
Cancel
Balamurugan - Madurai,இந்தியா
04-அக்-202211:29:19 IST Report Abuse
Balamurugan இந்த திட்டம் வயதான, நோய்வாய்ப்பட்ட, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த உதவிகரமாக திட்டம். நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X