அவங்க'ஸ்டிரைக்' பண்ணுவாங்க... எதுக்கு வீண் வம்புன்னு அரசு முடிவு பண்ணிடுச்சோ?

Added : அக் 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:சென்னை அண்ணா பல்கலை உட்பட அனைத்து பல்கலைகளிலும், தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்களை குத்தகை முறையில் நியமிக்க, உயர்கல்வி துறை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. 'அவுட்சோர்சிங்' எனப்படும், குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.புதுசா பணியாளர்களை போட்டு, சம்பளம், படிகள்,



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:


சென்னை அண்ணா பல்கலை உட்பட அனைத்து பல்கலைகளிலும், தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்களை குத்தகை முறையில் நியமிக்க, உயர்கல்வி துறை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. 'அவுட்சோர்சிங்' எனப்படும், குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.



latest tamil news



புதுசா பணியாளர்களை போட்டு, சம்பளம், படிகள், சலுகைகள் தரணும்... அது பத்தலைன்னு, அவங்க'ஸ்டிரைக்' பண்ணுவாங்க... எதுக்கு வீண் வம்புன்னு அரசு முடிவு பண்ணிடுச்சோ?




தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:


'இங்கு நடப்பது ஈ.வெ.ரா., அரசு, அண்ணாதுரை அரசு, கருணாநிதி அரசு என்பதை உணராமல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் உள்ளனர். பிற மாநிலங்களில் செய்த சேட்டைகளை, இங்கே செய்யலாம் என்று கருதுகின்றனர். தமிழகத்தில், அவர்களின் வால் ஒட்ட நறுக்கப்படும்' என, திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடப்பது, நரேந்திர மோடியின் அரசு; மன்மோகன் அரசோ, சோனியா அரசோ அல்ல. தமிழகத்தில் அப்போதெல்லாம் செய்த சேட்டைகளை, இப்போதும் செய்யலாம் என, நினைப்போரின் வால் ஒட்ட நறுக்கப்படும்.

ஆட்சியை மாத்துற அதிகாரம் மக்கள்கிட்ட தான் இருக்கு... ஆனா, யாராவது இது மக்களுக்கான அரசுன்னு சொல்றாங்களா, பாருங்க!



அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி:


சசிகலா சிறையில் இருந்த போது, அப்போதைய அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும்அவரை பார்க்க சென்றோம். ஆனால், பழனிசாமி வரவில்லை. அப்போதே, 'நீங்கள் தவறான நபரை, முதல்வராக அமர வைத்துள்ளீர்கள்' என, சசிகலாவிடம் நான் கூறினேன்.


latest tamil news



இதே பன்னீர்செல்வமா இருந்திருந்தா, உங்களுக்கு முன்னாடி பெங்களூரு ஜெயில் வாசல்ல உட்கார்ந்து இருப்பார், இல்லையா?



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி


:தி.மு.க., அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகரித்து விட்டது. அவர்களும் மக்கள் வரிப் பணத்தில் தான் ஓசி கார், ஓசி வீடு, ஓசி பணியாட்கள் என, அனைத்தும் ஓசியாக அனுபவிக்கின்றனர். இதை தவிர்க்கவே இலவசம் என கூறாமல், 'விலையில்லா' என்ற வார்த்தையை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

அடடா... அஞ்சு ரூபாய் பஸ் டிக்கெட் இலவசம்னு சொல்லிட்டு, மாசம் பல லட்சம் ரூபாய் வரிப்பணத்தை அமைச்சர்கள் ஓசியில அனுபவிப்பதில் துளி கூட நியாயமே இல்லை!



பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை:


நாடு முழுதும் பொது இடங்களில், புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம், 14 ஆண்டுகளுக்கு முன் காந்தி பிறந்த நாளில் அமல்படுத்தப்பட்டது. புகை தடை சட்டம், இன்று வரை ஏட்டில் இருந்தாலும், நடைமுறையில் இல்லை என்பது தான் வேதனையான உண்மை.

நம்ம ஊர்ல தான், நல்ல விஷயத்தை யாருமே கடைப்பிடிக்க மாட்டாங்களே!



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-அக்-202214:17:59 IST Report Abuse
Ramesh Sargam தமிழக திமுக அரசு சரியாக செயல்படவில்லை. பேசாம outsourcing செஞ்சிடலாமா...?
Rate this:
Cancel
srinivasanperumal - perumalpuram ,இந்தியா
04-அக்-202212:22:05 IST Report Abuse
srinivasanperumal நீங்க சொன்ன சரிதான்
Rate this:
Cancel
JAISANKAR - Mamallapuram,இந்தியா
04-அக்-202211:05:35 IST Report Abuse
JAISANKAR மத்திய அரசு நிறுவனம். கல்பாக்கம் அணுசக்தி துறையில் சுமார் 500 பேர் அவுட் சோர்சிங் முறையில் பணி அமர்த்த பட்டு உள்ளனர். இது குறித்த தங்கள் கருத்து என்ன?
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
04-அக்-202213:20:57 IST Report Abuse
Fastrackநல்ல விஷயம் தானே. இதில் என்ன குறையை கண்டுபிடித்த்தீர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X