சுருக்கில் சிக்கிய சிறுத்தை உயிரிழந்தது.

Added : அக் 04, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திச்சால் பகுதியில், மேத்யூ என்பவரின் தோட்டத்தில் வேட்டைக்கு வைத்திருந்த சுருக்கில் 5 வயதுடைய பெண் சிறுத்தை சிக்கியது.வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு, முதுமலையில் டாக்டர் ஸ்ரீதர் தலைமையிலான கால்நடை மருத்துவர் குழு சிறுத்தையை பரிசோதனை செய்தனர். சிறுத்தையின் மேலோட்டமான காயங்கள் சுத்தம் செய்யப்பட்டு மருந்து
சிறுத்தை, பந்தலூர், நீலகிரி, leopard,  Pandalur, Nilgiris, Cheetah,

பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திச்சால் பகுதியில், மேத்யூ என்பவரின் தோட்டத்தில் வேட்டைக்கு வைத்திருந்த சுருக்கில் 5 வயதுடைய பெண் சிறுத்தை சிக்கியது.வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு, முதுமலையில் டாக்டர் ஸ்ரீதர் தலைமையிலான கால்நடை மருத்துவர் குழு சிறுத்தையை பரிசோதனை செய்தனர். சிறுத்தையின் மேலோட்டமான காயங்கள் சுத்தம் செய்யப்பட்டு மருந்து தடவப்பட்டது. பின் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
நான்காவது தொராசிக் முதுகெலும்புகளின் முள்ளந்தண்டு செயல்பாட்டில் ஒரு எலும்பு முறிவு மற்றும் நரம்பு மண்டலத்தில் காயத்தின் தாக்கம் ஆகியவற்றை எக்ஸ்ரே மூலம் தெரிய வந்தது.

எக்ஸ்ரே பரிசோதனைக்கு பிறகு நரம்பு டானிக்ஸ், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஆன்டி பயாடிக்ஸ் சிறுத்தைக்கு கொடுக்கப்பட்டது. சிறுத்தையை இன்சுலேடிங் மீது வைத்து
வெதுவெதுப்பான நீர் பைகள் உடலின் மேல் வைக்கப்பட்டு, உடலை போர்வையால் மூடி, ஏர் வார்மர் பயன்படுத்தப்பட்டது. சூடாக்க உடலின் மேற்பரப்பை தொடர்ந்து தேய்த்து சிகிச்சையளித்தனர். ஆனால் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
05-அக்-202200:42:19 IST Report Abuse
Vena Suna நல்லதா போச்சு.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
04-அக்-202219:54:15 IST Report Abuse
N Annamalai வேட்டைக்கு வைத்து இருந்த சுருக்கு ?.பொய் போல தெரிகிறது .சிறுத்தை அதுவே வந்து விழுமா ?.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-அக்-202217:57:25 IST Report Abuse
வெகுளி அடடே... நெஜமாத்தான் சொல்றீங்களா?..... இனி நாடக காதல் செய்ய முடியாதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X