மிரட்டும் ஜீரோ டே பக்; பயனாளர்களுக்கு மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை..!| Dinamalar

மிரட்டும் 'ஜீரோ டே' பக்; பயனாளர்களுக்கு மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை..!

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (2) | |
பிரபல அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது மின்னஞ்சல் தகவல் செயலியான எக்ஸ்சேஞ்ச் சர்வரின் புதிய அப்டேட்டில் பயனாளர்களின் தனிநபர் தகவல் திருட்டு மற்றும் ஹேக்கர்களின் சட்டவிரோத செயல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகப் புகழ்பெற்றது. இதன் விண்டோஸ் இயங்குதளம் உலகின் அதிக கணினிகளில்
Zero Day Bug, Exchange Server, Microsoft, ஜீரோ டே பக், எக்ஸ்சேஞ்ச் சர்வர், மைக்ரோசாப்ட், Microsoft Exchange Server, Chinese hackers,

பிரபல அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது மின்னஞ்சல் தகவல் செயலியான எக்ஸ்சேஞ்ச் சர்வரின் புதிய அப்டேட்டில் பயனாளர்களின் தனிநபர் தகவல் திருட்டு மற்றும் ஹேக்கர்களின் சட்டவிரோத செயல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகப் புகழ்பெற்றது. இதன் விண்டோஸ் இயங்குதளம் உலகின் அதிக கணினிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளமாகும். கடந்த 1996 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் தளத்தில் எக்ஸ்சேஞ்ச் சர்வர் என்கிற மின்னஞ்சல் செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி கடந்த பல ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றால் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.


latest tamil news


சீன கணினி ஹேக்கர்கள் பலர் 'ஜீரோ டே' என்கிற கணினி வைரஸை பயன்படுத்தி எக்ஸ்சேஞ்ச் சர்வரில் உள்ள முக்கியமான தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல்களைத் திருடுவதாக அமெரிக்க ஜோ பைடன் அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதனையடுத்து விழித்துக்கொண்ட மைக்ரோசாஃப்ட், எக்ஸ்சேஞ்ச் சர்வரின் அடுத்தடுத்த அப்டேட்டுகளில் வைரஸ் புரோக்ராம்களில் இருந்து தப்பிக்க தனிநபர் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. CVE-2022-41040 என்கிற பிரபல பக் ஆனது, எக்ஸ்சேஞ்ச் சர்வரின் தகவல்களைக் களவாடி வருகிறது.


latest tamil news


கடந்த ஆண்டு அமெரிக்காவில் 30 ஆயிரம் பயனாளர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து மைக்ரோசாஃப்ட் அதீத கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. ஜீரோ டேக் பக் குறித்து தங்கள் நிறுவனம் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ள மைக்ரோசாஃப்ட், எக்ஸ்சேஞ்ச் சர்வர் பயனாளர்கள் செயலியைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வழிமுறைகளை அறிவித்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X