மோடி ஆட்சியில் பயங்கரவாதிகள் அட்டூழியம் குறைவு: அமித்ஷா பெருமிதம்

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
ரஜோரி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், பாதுகாப்பு படையினர் உயிரிழப்பது குறைந்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜோரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி
amitshah, home minister,  terrorist, kashmir, jammu kashmir, jk, homeminister amit shah, modi government, அமித்ஷா, உள்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  மோடி அரசு, பயங்கரவாதிகள், ஜம்மு காஷ்மீர், காஷ்மீர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ரஜோரி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், பாதுகாப்பு படையினர் உயிரிழப்பது குறைந்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜோரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து பேசியதாவது:

காஷ்மீரில் சிறப்பு சட்டம் வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டால், ரத்தம் பெருக்கெடுத்து ஓடும் எனக்கூறியவர்களுக்கு, இன்றைய காஷ்மீர் பேரணியும், மோடிக்கு ஆதரவான கோஷம் ஆகியவை பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரை 3 குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்தன. ஆனால், தற்போது, பஞ்சாயத்துகள், மாவட்ட கவுன்சில்களை தேர்வு செய்யும் அதிகாரம் 30 ஆயிரம் பேருக்கு கிடைத்துள்ளது.சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதன் மூலம், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மலை பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு இட ஒதுக்கீடு பலன்கள் கிடைத்துள்ளன. முன்பு, காஷ்மீர் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொடுத்த பணத்தை சிலர் மட்டுமே பயன்படுத்தினர். ஆனால், தற்போது அனைத்து பணமும் மக்கள் நல திட்டங்களுக்கு செலவு செய்யப்படுகிறது.latest tamil news


பயங்கரவாதிகளுக்கு எதிராக மோடி அரசின் கடுமையான நடவடிக்கை காரணமாக, ஆண்டுதோறும் உயிரிழக்கும் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை 1,200 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 134 ஆக குறைந்துள்ளது.காஷ்மீரின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். குஜ்ஜார், பகர்வால், பஹாரி சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் நிச்சயமாக அமல்படுத்துவோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.latest tamil news


முன்னதாக வைஷ்ணவ தேவி கோயிலில் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-அக்-202202:51:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சாவி யார் கையிலே இருக்குங்குறத கவனிக்கணும் பாசு.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
04-அக்-202223:02:36 IST Report Abuse
Sivagiri ஆனா ஸ்லீப்பர் செல்களை கொண்டு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி ஒவ்வொரு ஆளா கொல்றாய்ங்களே . .
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-அக்-202222:45:24 IST Report Abuse
Ramesh Sargam பயங்கரவாதிகள் அட்டூழியம் குறைவு. ஆனால் முற்றிலும் ஒழிக்கும்வரை நாம் நிம்மதியாக இருக்க முடியாது. மோடி அவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே அதற்கு ஒரு முடிவு காணவேண்டும். நாளை, ஒருவேளை, வேறு கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால், அப்படி எல்லாம் எதுவும் நடக்க வாய்ப்பில்லை, அப்படி ஒரு வேலை நடந்துவிட்டால், 'பழைய குருடி, கதவை திறடி' கதைபோல் ஆகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X