15 டன் ரேஷன் அரிசியுடன் கன்டெய்னர் லாரி பறிமுதல்; இருவர் கைது

Added : அக் 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற, 15 டன் ரேஷன் அரிசியுடன் கன்டெய்னர் லாரியையும் குடிமை பொருள் வழங்கல் பிரிவு பறக்கும்படையினர் பிடித்தனர்.தமிழக எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகிரியில் இருந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவற்றை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்
Ration Rice, Container Truck, Krishnagiri,ரேஷன் அரிசி,  கன்டெய்னர் லாரி, கிருஷ்ணகிரி,


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற, 15 டன் ரேஷன் அரிசியுடன் கன்டெய்னர் லாரியையும் குடிமை பொருள் வழங்கல் பிரிவு பறக்கும்படையினர் பிடித்தனர்.



தமிழக எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகிரியில் இருந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவற்றை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ தலைமையில் ஆர்.ஐ., முருகேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். காலை, 8:00 மணியளவில் கிருஷ்ணகிரியில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகில் சென்ற ஈச்சர் மினி கன்டெய்னர் லாரியை மடக்கினர்.



அதில், 50 கிலோ அளவிலான, 300 மூட்டைகளில் 15,000 கிலோ ரேஷன் அரிசியை, காஞ்சிபுரத்திலிருந்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் கன்டெய்னர் லாரியை கிருஷ்ணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.



இதுகுறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கலைச்செல்வனுக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஓசூர், தொரப்பள்ளி வஜீர்கான், 28 மற்றும் காஞ்சிபுரம் சுரேஷ், 34 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-அக்-202206:41:05 IST Report Abuse
Mani . V விடுப்பா, விடுப்பா. நம்ம கட்சி (திமுக) ஆட்களாக இருக்கப் போகிறார்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-அக்-202205:59:45 IST Report Abuse
Kasimani Baskaran …….
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-அக்-202218:53:31 IST Report Abuse
Natarajan Ramanathan எனது ரேஷன் கார்டில் நான் அரிசியே வாங்காவிட்டாலும் மாதாமாதம் 20 kg வாங்கியதாக SMS வருகிறதே. அது எல்லாம் இப்படித்தான் போகிறதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X