காஷ்மீரில் ஓர் ஊட்டி; டூட்பாத்ரி

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | |
Advertisement
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள டூட்பாத்ரி, பட்ஜெட் சுற்றுலா விரும்பிகளுக்கு ஏற்ற சுற்றுலாத் தலமாகும். காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் கான் சாகிப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 2,730 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பசுமை போர்த்திய சுற்றுலாத் தலம். தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 42 கி.மீ., தூரத்தில் உள்ள டூட்பாத்ரியில் நமது தமிழக சுற்றுலாத் தலமான ஊட்டியில்
Doodhpathri, jammu kashmir, cheap tourist spot in india, டூட்பாத்ரி, ஜம்மு காஷ்மீர் சுற்றுலா, pv

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள டூட்பாத்ரி, பட்ஜெட் சுற்றுலா விரும்பிகளுக்கு ஏற்ற சுற்றுலாத் தலமாகும். காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் கான் சாகிப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 2,730 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பசுமை போர்த்திய சுற்றுலாத் தலம்.

தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 42 கி.மீ., தூரத்தில் உள்ள டூட்பாத்ரியில் நமது தமிழக சுற்றுலாத் தலமான ஊட்டியில் உள்ளதுபோல பல ஏக்கர் பரந்து விரிந்த பச்சைப் புல்வெளி, மலர்கள் உள்ளன. இங்குள்ள ஆற்றில் ஓடும் தண்ணீர் பால் போன்று வெண்மையாக இருப்பதால் இந்த சுற்றுலாத் தலம் 'பால் பள்ளத்தாக்கு' எனப் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.


latest tamil newsஇமய மலையின் பிர் பாஞ்சல் மலைத் தொடரில் பாத்திரத்தின் குமிழ்போல அமைந்துள்ள இந்த டூட்பாத்ரி பள்ளத்தாக்கில் அடர்ந்த பைன் மரங்கள் உள்ளன. பனி காலங்களில் இந்த புல்வெளியில் வெண்பனி படர்ந்து காணப்படும். கோடை காலத்தில் பசும் புல்வெளி பளிச்சிடும். பனி காலத்தில் இங்கு மனிதர்கள் வாழ்வது சிரமம் என்பதால் வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே இந்த சுற்றுலாத் தலம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும்.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 2 மணி நேர கார் அல்லது பேருந்து பயணம் மூலமாக டூட்பாத்ரி வந்தடைந்து விடலாம். ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் அற்ற இந்த புல்வெளிகளில் நேரம் செலவழிக்க ஹனிமூன் தம்பதிகள் விரும்புவர். இங்கு அவ்வப்போது ஆடு, மாடுகள் மேய்க்கப்படுவதுண்டு. நகரத்தைத் தாண்டி ஒதுக்குப்புறத்தில் இருக்கும் இந்த இடம் முற்றிலும் செலவே அற்ற ஓர் சுற்றுலாத் தலமாகப் புகழ் பெற்று வருகிறது.

வெறும் இரண்டு நாள் பயணத்தில் தமிழகத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் சென்று இந்த செலவற்ற சுற்றுலாத் தலத்தில் நேரம் செலவிடலாம். காஷ்மீரில் சுற்றிப்பார்க்க தால் ஏரி, வைஷ்ணவி தேவி கோவில், குல்மார்க் என பல இடங்கள் இருந்தாலும் பட்ஜெட் சுற்றுலா விரும்பிகளுக்கு டூட்பாத்ரிதான் ஆதர்ச சாய்ஸ்..!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X