வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் நடத்திய தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி. கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
![]()
|
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் உக்ரைனில் நிலவிவரும் சூழல் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளதாகவும் போரை நிறுத்துவதற்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது.
தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டியது அவசியம் எனவும் , உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண, இந்தியா பங்காற்ற தயாராக இருப்பதாக மோடி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் இதே போன்று பிரதமர் மோடி, உக்ரைன் அதிபருடன் தொலை பேசி வாயிலாக உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.