வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் இலவச மின்சாரம் விநியோக திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த துணை நிலை கவர்னர் சக்சேனா உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லி துணை நிலை கவர்னர் விகே சக்சேனா , முதல்வர் கெஜ்ரிவால் அரசு இடையே மோதல் போக்கு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கவர்னரின் ஒப்புதல் கேட்டு முதல்வர் அலுவலக அதிகாரிகள் அனுப்பிய 45 க்கும் மேற்பட்ட கோப்புகளை திருப்பி அனுப்பிய கவர்னர். நேற்று முன்தினம் நடந்த காந்தி ஜெயந்தி விழாவை புறக்கணித்தற்கான விளக்கம் கேட்டு, கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதினார் கவர்னர்.
![]()
|
இந்நிலையில் டில்லியில் இலவச மின்சாரம் விநியோகிப்பது தொடர்பாக ஆம் ஆதமி அரசு கொண்டு வந்த திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய துணை நிலை கவர்னர் , இலவச மின்சார விநியோகத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்கு அறிக்கை சமர்பிக்குமாறு தலைமை செயலாளர் நரேஷ்குமாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக பஞ்சாப் சட்டசபை தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. தற்போது குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இதே வாக்குறுதியை கெஜ்ரிவால் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் கண்டனம்
இது குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியது, துணை நிலை கவர்னரின் இந்த உத்தரவு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தவிர வேறு என்ன இருக்க முடியும் என்றார்.